அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (புலிபுரக் கோவில்)
God Name : ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
ராஜநாராயண சம்புவராயன் எனும் சிற்றரசன் மடவளாக வரி-வசூலிப்பு வருமானத்தின் ஒரு பகுதியை, இக்கோவிலுக்கு செலவிட்டதாக, கல்வெட்டுக் குறிப்புக்கள் கூறுகின்றன. இக்கோவிலருகே பாலாறு தெற்கே திரும்பி தட்சிண பிரவாஹினியாக ஓடுகின்றது. நவ புலீஸ்வரங்களுள் ஒன்று வியாக்ரபாதர் பூஜித்த ஒன்பது சிவஸ்தலங்களும் புலீஸ்வரங்கள் எனவும் இறைவன் புலீஸ்வரராகவும் வழிபடப்படுகின்றன. அவை 1. திருப்புலிவனம் (உத்திரமேரூர்) 2. புலிப்பாக்கம் (செங்கல்பட்டு) 3. புலிப்புரக்கோவில் (மதுராந்தகம்) 4. ஓமாம்புலியூர் (சிதம்பரம் அருகே) 5. புலிவலம் (திருவாரூர்) 6. தப்ளாம்புலியூர் (திருவாரூர்) 7. பெரும்புலியூர் (தஞ்சாவூர்) 8. விளமர் (திருவாரூர்) 9. கோடம்பாக்கம். (சென்னை)
மூலவர்: ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர், உற்சவர்: ஸ்ரீ நடராஜர், அம்பாள்: ஸ்ரீ பாலகுஜாம்பிகை மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர். அடிப்பக்கம் பருமனாகவும், மேல் பக்கம் சிறியதாகவும், வெண்மை நிறத்துடனும் காட்சி தரும் சுயம்பு லிங்கம். லிங்கத்தின் சிரசில் புலி நகக்குறி அடையாளம் காணப்படுகின்றது. ஆதியில் வியாக்ரபாதர் வழிபட்ட சிவலிங்க மூர்த்தம்.. புலிப்பாணி சித்தரால் சித்தமருந்து காப்பிடப்பட்ட மூர்த்தம். வியாக்ரபுரீஸ்வரர் மூலஸ்தானத்தில் அம்பாள் லிங்க வழிபாடு செய்யும் காட்சிப் புடைப்பு சிற்பமாக உள்ளது. எட்டு தேவலோக பெண்கள் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்பு சிற்பம் ஒன்று, உள்வாயிலின் மேற்புறத்தில் காணப்படுகின்றது. கண்ணாடி, பூர்ணகும்பம், ரிஷபம், வெண்சாமரம், லட்சுமியின் திருவுருவம், ஸ்வஸ்திகம், சங்கம், தீபம் ஆகியவற்றால் உபச்சாரம் செய்யும் தோரணையில் உள்ளனர். விசாலமான கருவறை. உற்சவரான ஸ்ரீ நடராஜரின் திருமேனி கலையழகு கொண்டது. வியாக்ரபாதருக்கு ஹேமசபேசனாகக் காட்சி தந்தவர். வலச்சுற்றில் - விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை, பைரவர், உமாமகேஸ்வரர், ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். அம்பாள் பாலகுஜாம்பிகை தெற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். தாமரை மற்றும் நீலோற்பல மலர்கள் கொண்ட மேற்கரங்களுடனும், அபய - வரத முத்திரைகள் கொண்ட கீழ்க்கரங்களுடனும் தரிசனம் தருகிறாள். கஜப்பிருஷ்ட விமான அமைப்பைக் கொண்ட தூங்கானை மாடக் கோவில். மண்டபத் தூண்களும் அதிலுள்ள சிற்பங்களும் அற்புதமாக உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.