அருள்மிகு விஸ்வநாத ஸ்வாமி திருக்கோவில் (தட்டாத்திமூலை)
God Name : ஸ்ரீ விஸ்வநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
கார்த்திகை ஞாயிறன்று ஸ்ரீ வாஞ்சியத்து குப்த கங்கையில் நீராட விஸ்வநாதருடன் வந்த விசாலாட்சி இவ்வூர் வளப்பாற்றங்கரையில் இளைப்பாற அமர்ந்தாள். மேற்கு முகமாக ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள்.
இந்த சிவலிங்கத்தை பூஜிப்பவர்கள் 108 சிவலிங்கங்களை பூஜித்த பலன் பெறுவர் என ஐதீகம். அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
ஸ்ரீ ராமபிரான் தாடகையை துரத்தி வந்தபோது, தாடகை இவ்வூருக்கு வந்து ஒளிந்து கொண்டதால் இவ்வூர் தாடக - அந்த - புரம் - தாடகாந்தபுரம் என்றாயிற்றாம். தாமரைத் தடாகத்துடன் முக்கோண வடிவமானதால் தாடக கோணம் என்றழைக்கப்பட்டு, தற்போது தட்டாத்தி மூலை என அழைக்கின்றனர்.
மூலவர்: ஸ்ரீ விஸ்வநாதர், அம்பாள்: ஸ்ரீ விசாலாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ விஸ்வநாதர். அம்பிகை ஸ்தாபித்த லிங்க மூர்த்தம்.
இவருக்கு ஷோடஷ முறையில் 16 வித அபிஷேகங்களைச் செய்கின்றனர்.
அம்பாள் விசாலாட்சி கைகளில் தாமரை ஏந்தி அழகே உருவாகக் காட்சி தருகின்றாள். இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள்.
ஸ்ரீ மஹா கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், யோக தட்சிணாமூர்த்தி, சிவசூரியன், பைரவர், வாராஹி, சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். உற்சவ மூர்த்திகள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
இவ்வாலயத்தில் ஸ்வாமிக்கு ஏகதள விமானமும், அம்பாளுக்கு சப்ததள விமானமும், மஹாகணபதிக்கு சதுராமலக விமானமும், சுப்ரமண்யருக்கு அஷ்டதள விமானமும் இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.