அருள்மிகு ஹரிஹர புத்ரஸ்வாமி திருக்கோவில் (தட்டாத்திமூலை)
God Name : கரும்பாயிர சுவாமி எனப்படும் ஸ்ரீ ஹரிஹர புத்ர சுவாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
வணிகன் ஒருவன், கரும்புகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு இவ்வூர் வழியே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். அருகேயுள்ள குளக்கரையில் வண்டியை நிறுத்திவிட்டு, குளத்தில் கை கால்கள் சுத்தம் செய்து விட்டு திரும்புகையில், பாலகனான வந்த சாஸ்தா, சிறு கரும்பு துண்டு ஒன்றை தருமாறு கேட்டார்.
இவைகள் கரும்புகள் இல்லை - வெறும் நாணல்களே என பொய்யுரைத்தான் வணிகன். மறுநாள் அவன் சந்தைக்கு போய் சேர்ந்ததும் வண்டியிலுள்ள சரக்கை இறக்க முற்பட்டபோது, அவை நாணல்களாக இருப்பது கண்டு பயந்து, அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்த வணிகன், சுவாமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, 1000 கரும்புகளை கொண்டு பந்தலிடுவதாக வேண்டிக் கொண்டான். நாணல்கள் மீண்டும் கரும்புகளாக மாறின. இதனால் கரும்பாயிர சுவாமி என்ற பெயர் கொண்டார்.
சப்ததள விமானம் கொண்ட மூலஸ்தானத்தில் ஸ்ரீ ஹரிஹர புத்ர சுவாமி மூலவராக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
கிழக்கு பார்த்து அமர்ந்த கோலம். இவருக்கு கரும்பாயிர சுவாமி என்ற பெயரும் உண்டு. பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர்.
கோவிலின் முன்பகுதியில் முனீஸ்வரர் பெரிய குதிரை சிலையுடன் இடம் பெற்றுள்ளார். வலச்சுற்றில் சப்த மாதர்கள், மதுரை வீரன் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
10 நாட்களுக்கு, சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடுகின்றனர். திருவுளச்சீட்டு கட்டி பிரார்த்தனை செய்யும் சம்பிரதாயம் கடைபிடிக்கின்றனர். ஓசைக்கொரு மணி கட்டினால் - ஆசைக்கொரு மகவு பிறக்கும் என்கிறார் அர்ச்சகர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.