அருள்மிகு சௌந்தரேச்வரர் திருக்கோவில் (திருப்பனையூர்)
God Name : அழகியநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
தாய் வயிற்றில் இருந்தபோதே, கரிகாற் சோழன் தந்தையான இளஞ்செட்சென்னியை இழந்து, அரசனாகும் உரிமையோடு பிறந்தான். பிறந்த குழந்தையைக் கொன்றுவிட்டு, அரசைக் கைப்பற்றும் சூழ்ச்சிகள் அரங்கேறின. கரிகாலனின் தாய்மாமனான இரும்பிடர்த்தலையார் குழந்தையையும் அரசியையும் திருப்பனையூருக்கு அனுப்பி வைத்தார்.
இவ்வாலயத்துள் அடைக்கலம் தேடி வந்த தாய் - சேய் இருவரையும், இங்கிருந்த விநாயகர் துணையாக இருந்து அவர்களைக் காப்பாற்றினார். எட்டு வயது வரை பிள்ளையாரின் அரவணைப்பில் வளர்ந்தான் கரிகாலன்.
திருப்புகலூரில் சுந்தரர் பெற்ற பொன்னை மாற்றுரைத்த பிள்ளையார் என்பதனால் மாற்றுரைத்த பிள்ளையார் என்ற பெயர் வந்தது.
சுந்தரருக்கு நடனக்காட்சி காட்டியருளிய ஸ்தலம்.
துணை இருந்த விநாயகர் சந்நிதிக்கு பின்புறமாக, ஆண் - பெண் ஆகிய இரண்டு பனைமரங்கள் உள்ளன. இவை வளர்ந்து முதிர்ச்சியடையும் காலத்தில், வித்திட்டு முளைக்காததாக, அடி வேரில் இரண்டு பனங்கன்றுகளை (வாழையைப் போல்) தோற்றுவிக்கின்றன. ஆண் - பெண் வாரிசு மாறாமல் தோன்றும் அதிசயம் நிகழும் ஸ்தலம்.
மூலவர்: அழகிய நாதர், அம்பாள்: பெரிய நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அழகிய நாதர். சதுர ஆவுடையாருடன் கூடிய ஒளி வீசும் அழகிய திருமேனி. இவருக்கு சௌந்தரேச்வரர், தாலவனேஸ்வரர், பனங்காட்டு இறைவன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. பராசரர் பிரதிஷ்டை செய்த லிங்க மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி.
பனை மரங்களின் நடுவே எழுந்தருளிய சிவலிங்கமே மூலவராக மாறி, பின்னர் கோவில் எழுப்பப்பட்டதால் பனையடியப்பன் என்றும் கூறுவர்.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பிகை பெரிய நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சதுர் புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. நின்ற திருக்கோலம். ப்ரஹந் நாயகி என்றும் அழைக்கின்றனர்.
அம்பிகை கோவில் மண்டபமருகே, ஸ்தல விருட்சமான பனை மரத்தடியில் துணை இருந்த விநாயகர் கோவில் கொண்டுள்ளார். கரிகால சோழனுக்கு துணையாக இருந்ததால் இந்த பெயரைக் கொண்டார்.
முன் மண்டபத்திலுள்ள சோமாஸ்கந்தர், நடராஜர், சண்டிகேசர் ஆகிய படிமங்கள் யாவும் பேரெழில் கொண்டவை. கரங்களில் வில் ஏந்திய திரிபுர சம்ஹார மூர்த்தியும் திரிபுர சுந்தரியும் அவசியம் பார்க்க வேண்டிய அழகு படிமங்கள்.
கோஷ்ட மூர்த்தங்களுடன் பராசரரின் திருவுருவமும் காணலாம். பிரகார வலச் சுற்றில் சப்த ரிஷிகள் பூஜித்த லிங்கங்களை தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் பராசரர் பூஜித்த தாலவனேஸ்வரர் லிங்க வடிவத்தை தரிசிக்கலாம்.
உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் மாற்றுரைத்த பிள்ளையாரை தரிசிக்கலாம்.
ஆலயத்தின் எதிர்புறமாக திருக்குளமான அமிர்தபுஷ்கரிணி மற்றும் வில்லூண்டி தீர்த்தம் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.