திரு ஆரூர் அரனெறியப்பர் திருக்கோவில் (திருவாரூர்)

God Name : அரனெறியப்பர்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

இவ்வாலயத்தின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டே ராஜராஜசோழன் தஞ்சைப் பெருவுடையார் கோவிலை நிர்மாணித்தான் எனக் கூறுவர். இவ்வாலயக் கர்ப்பக்ரஹ விமான கலசத்தின் நிழலும் பூமியில் விழுவதில்லை. திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேறு எனும் ஊரில் அந்தணக் குலத்தில் பிறந்த நமிநந்தி அடிகள் தனது ஊர் சிவாலயத்தில் தினமும் நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதைத் தொண்டாகச் செய்து வந்தார். ஒரு நாள் தியாகேசனை வழிபட்டுவிட்டுத் திரும்பும்போது, மழை மேகம் சூழ்ந்ததாலும், நெடுந்தூரத்திலுள்ள தன் வீட்டிற்குப் போய் நெய் எடுத்து வர இயலாததாலும், அருகே கடை ஏதும் இல்லாததாலும், அருகே உள்ள வீட்டில் நெய் கடனாகக் கேட்கலாம் என்று முடிவெடுத்தார். அந்த வீட்டிற்குரியவர் ஒரு சமணர். "கனலைக் கையில் வைத்திருக்கும் உமது இறைவனுக்கு விளக்கு ஏன்?" எனச் சமணர் நையாண்டி செய்தார். "அவசியமானால் தண்ணீர் விட்டு விளக்கேற்று" எனக் கூறி, கதவைச் சாத்தி, அவமானப்படுத்தி விட்டார். மனம் வருந்திய நிலையில் குளத்துக்குச் சென்ற நாயனார், குளத்து நீரைக் கொண்டு வந்து, விளக்கில் ஊற்றி தனது பக்தியை நிலைநாட்டினார். விளக்குகள் அனைத்தும் பிரகாசமாக எரிந்தன. அது முதல் இந்நிகழ்ச்சி அசலேஸ்வரர் கோவில் அரனெறி எனப் பெயர் பெற்றது. 'ஹ்ரு' என்றால் 'போக்குகிறது' எனப் பொருள். 'ஹ்ரு' என்ற பதத்திலிருந்து தோன்றியது ஹரன், அதாவது அரன். அரனை அடையும் மார்க்கம் என்ற பொருளில் 'அரனெறி' என்றாகி, திருமூலட்டானத்தையும் வன்மீகநாதரையும் குறிப்பதாக ஸ்தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இங்கு குறிப்பிடப்படும் 'அரநெறி' என்பது வேறு.) சமற்காரன் எனும் அரசன் தான் ஸ்தாபித்த லிங்கத்திற்குள் ஸ்வாமியை எழுந்தருள வேண்டி தவம் இருந்தான். இறைவன் சலியாது எழுந்தருளியதால் அசலேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். செம்பியன்மாதேவி திருப்பணி செய்த கோவில்.
மூலவர்: அரனெறியப்பர், அம்பாள்: வண்டார்குழலி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அரனெறியப்பர். பெரிய திருமேனியுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். அசலேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. வண்டார்குழலி அம்பாள் திரிபங்கி வடிவில் தரிசனம் தருகின்றாள். ஆலங்கொண்டார், நடராஜப் பெருமான் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. பஞ்சலிங்கங்களைத் தரிசிக்கலாம். உட்பிரகாரத்துக் கட்டுமலை மேல் அருணாசலர் சந்நிதி உள்ளது. சுற்றுச்சுவர்களில் பல அரிய சிற்பங்கள் காணப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.