அருள்மிகு பதஞ்சலி மனோகர் திருக்கோவில் (திருவிளமல்)

God Name : பதஞ்சலி மனோகரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

சிவபெருமானின் பாதங்களுக்கு நித்ய பூஜை நடப்பதால், சிவபாத ஸ்தலம் எனப் பெயர் கொண்டது. விளமர் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் நடனக் கோலத்தைக் காண வேண்டி ஆதிசேஷன் நீண்ட தவம் மேற்கொண்டார். அறிவுரைப்படி பூலோகம் வந்த ஆதிசேஷன், அங்கு புத்திர பாக்கியம் வேண்டி தவமிருந்த அத்ரி-அனுசுயா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து பதஞ்சலி என்ற பெயர் கொண்டு வளர்ந்து வந்தார். வியாக்ரபாதருடன் சேர்ந்து தில்லையிலே நடனக்காட்சியை கண்டு களித்தார். பின்னர் விளமல் என்றழைக்கப்படும் இவ்வூருக்கு வந்தார். அம்பாளின் யோசனைப்படி இத்தலத்தில் மண்ணால் லிங்கம் ஒன்றை பிடித்து வைத்து வழிபட்டு வந்தார். சிவபெருமான் பிரத்யட்சமானார். பக்தி பரவசத்திலே தன்னை மறந்து தேவகாந்தாரி ராகத்தில் பாடலானார் பதஞ்சலி. சிவபெருமானும் நர்த்தனம் ஆடினார். நடனம் ஆடும்போது தனது ருத்ரபாதத்தை காட்டியருளினார். தசரதர் பித்ரு சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம். தேவாரத் திருத்தலம்.
மூலவர்: பதஞ்சலி மனோகரர், அம்பாள்: யாழினும் மென் மொழியாள். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக பதஞ்சலி மனோகரர் எழுந்தருளியுள்ளார். பதஞ்சலி முனிவர் மண்ணால் பிடித்து வைத்து உருவாக்கிய லிங்கம். தீப ஜோதி பிரதிபலிக்கும் தேஜோமய லிங்கத் திருமேனி. மூலஸ்தானத்தில் லிங்கம், பின்புறம் நடராஜர், முன்புறம் சிவபாதங்கள் என மூன்று வடிவங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது. அன்னை யாழினும் மென் மொழியாள் ஷோடாட்சர தேவியாக போற்றப்படுகின்றாள். ஸ்ரீ சக்கரம் தாங்கி அலங்கார பூஷிதையாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சக்தி பீடங்களுள் ஒன்றான வித்யா பீடமாக போற்றப்படுகின்றது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்த நின்ற இடத்தில் நந்தியம் பெருமானை தரிசிக்கலாம். மத்தக மணியுடன் விநாயகப் பெருமான் காட்சி தருகின்றார். விளமர் அனுக்ரஹ மூர்த்தியாக இருப்பதால் பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.