அருள்மிகு தட்சிண கோகர்ணேஸ்வரர் திருக்கோவில் (புலிவலம்)
God Name : தட்சிண கோகர்ணேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
யமபயம் நீக்கிடும் இவ்விறைவனை, மதுரையில் அவதரித்த இரண்டு கோகர்ணர்கள் ஸ்தாபித்து பூஜித்து வழிபட்டதாக குறிப்பொன்று கூறுகிறது. இருவரும் இரண்டு இடங்களில் லிங்கம் ஸ்தாபித்தனர். ஒன்று வண்டாம்பாளையம் என்ற இடம். இதை உத்தர கோகர்ணேஸ்வரர் என்பர். அடுத்தது புலிவலம். இதை தட்சிண கோகர்ணேஸ்வரர் என்பர்.
கோகர்ணர்கள் வழிபட்டதால் இறைவனுக்கு கோகர்ணேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரை வழிபட்டால் யமபயம் நீங்கும்.
மங்களூரிலும், புதுக்கோட்டையிலும் கோகர்ணேஸ்வரர்கள் இருப்பதால் இவரை தட்சிண கோகர்ணேஸ்வரர் என்று அழைக்கின்றனர். வியாக்ரபாதர் வழிபட்ட ஸ்தலங்களுள் ஒன்று என்பதால் புலிவலம் எனப் பெயர் கொண்டது.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: தட்சிண கோகர்ணேஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கோகர்ணேஸ்வரர். ஆனந்தவல்லி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.