அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோவில் (திருக்காரவாசல்)
God Name : மூலவர்: கண்ணாயிர நாதர்் விடங்கர்: ஆதி விடங்கர்
திருக்கழுக்குன்றம் கோவில்
கரூர்
Call : +91-
சிவபெருமானின் கோபத்திற்காளான பிரம்மதேவர் பதவி இழந்தார். பின்னர் இத்தலம் வந்து நீண்ட காலம் தவமிருந்து, இழந்த பதவியை மீண்டும் பெற்றார் என ஸ்தல வரலாறு.
இவ்விறைவனை தரிசிக்கும் பாக்கியம் தனக்கு கிட்டவில்லையே என வருந்திய குருட்டுப்பெண் ஒருத்திக்கு கண் பார்வையை தந்து தரிசனமும் தந்ததாக ஸ்தல வரலாறு.
கமலாலயத்தில் நீராடுவோர் இந்திரன் ஆகும் பேறு பெறுவதைக் கண்டு, அக்குளத்தைத் தூர்த்து விடக் கூறிய பாவம் நீங்க இந்திரன் கண்ணாயிர நாதரை வழிபட்டான். பதஞ்சலி முனிவர்க்கு ஏழு வகை தாண்டவங்களை காட்டியருளிய இறைவன்.
கண்ணாயிர நாதருக்கு தைல அபிஷேகம் செய்து, தேனில் ஊற வைத்த அத்திப்பழங்களை நைவேத்தியம் செய்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமாகும் என்பர்.
ஆதியில் கருப்பு அகில் மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் கார் அகில் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி காராயில் என்றானது. தற்போது திருக்காரவாசல் எனப்படுகிறது.
தேவாரத் திருத்தலம் - சப்த விடங்க ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: கண்ணாயிர நாதர்் விடங்கர்: ஆதி விடங்கர்் அம்பாள்: கைலாச நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் கண்ணாயிர நாதர். நேத்ர சஹஸ்ரேஸ்வரர் என்று வடமொழியில் அழைப்பார்கள். குற்றம் பொறுத்த நாதர் என்ற பெயரும் உண்டு. புரட்டாசி பௌர்ணமியில் தேவேந்திரன் பூஜித்ததாக ஐதீகம்.
தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார் அம்பிகை கைலாச நாயகி. கயிலையிலிருந்து நேராக இங்கு வந்ததால் கைலாச நாயகி எனப் பெயர் கொண்டாள். க்ஷமா தேவி என்றொரு பெயரும் உண்டு.
தியாகராஜர் சபையில் ஆதி விடங்கர் உயர்ந்த மேடை மீதுள்ள சிம்மாசனத்தில் எழுந்தருளியுள்ளார். முன்புறமாக வீர வெண்டையங்களை வைத்துள்ளனர். தியாகராஜருக்குரிய ஆறு அபிஷேகங்கள், கிரகண புண்யகால அபிஷேகங்கள் ஆகிய யாவும் சிறப்புற நடத்துகின்றனர்.
ஆதி விடங்கரின் நடனம் குக்குட நடனம் - அதாவது சண்டைக்குச் செல்லும் கோழி, இடமும் - வலமும் தலையை சாய்த்துப் பார்த்து முன்னேறியும், சற்று நிதானித்தும், சுழன்றும் தாக்குவது போல் ஆடும் நடனம் குக்குட நடனம் எனப்படும்.
உற்சவ மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
பிரமோத விநாயகர், இந்திரபுரீஸ்வரர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், ஞான தட்சிணாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.