அருள்மிகு கூரம்ப அய்யனார் திருக்கோவில் (தான்யகாந்தபுரம் - நெம்மேலி)

God Name : கூரம்ப அய்யனார் எனப்படும் நெம்மேலி சாஸ்தா

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

கோவிலைச் சுற்றி அரசமரங்கள், சோலைகள், வாய்க்கால் என இயற்கை எழில் சூழ்ந்த ஸ்தலம். வெளியே பெரிய குதிரை சிலை ஒன்று கண்ணைக் கவரும் வகையில் நிற்கின்றது. முகுந்தராஜன் எனும் அரசன் வேட்டையாட காட்டிற்கு வந்தபோது, அருகே தென்பட்ட எல்லைக் கல்லில் தனது அம்பைக் கூர் தீட்டலானான். அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. உடனே கேட்ட அசரீரி வாக்குப்படி, அது வெறும் கல் அல்ல, அய்யனார் எனத் தெரிந்து கொண்டு, நடந்த தவற்றிற்கு மன்னிக்க வேண்டினான். பின்னர் அவற்றை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு. அம்பைக் கூர் தீட்டியதால் கூர்-அம்பு-அய்யனார் என்பதை கூரம்ப அய்யனார் என அழைக்கின்றனர். தான்யங்கள் மிகுதியாக வைக்கப்பட்டுள்ள இடம் என்பதால் தான்யகாந்தபுரம் என்கின்றனர். அகஸ்தியர், முள் கொண்டு தரையைக் கீறி உண்டாக்கிய ஆறு முள்ளாறு எனப்படுகிறது. குழந்தைப்பேறு, வழக்குகளில் வெற்றி, நோய்கள் விலக - இவரைப் பிரார்த்திக்கின்றனர். காஞ்சி மடத்துப் பெரியவர் தங்க விபூதி பட்டை செய்து அணிவித்துள்ளார் என குறிப்பொன்று கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக கூரம்ப அய்யனார் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஆயிரக்கணக்கான பக்தர்களால் நெம்மேலி சாஸ்தா எனப் போற்றப்படுபவர். பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். நீண்ட சதுரத்துடன் மூன்று தனித்தனி கற்களில் ஆவாஹனம் செய்யப்பட்டுள்ளனர். வாழைப்பழ அய்யனார், பிச்சையா, போத்து ராஜா, வீரனார் ஆகியோர் குதிரை வாகனங்களுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றனர். பங்குனி உத்திரத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஏராளமான பக்தர்களுக்கு குலதெய்வமாக விளங்கும் சாஸ்தா மிகுந்த வரப்பிரசாதி.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.