அருள்மிகு ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் (மன்னார்குடி)

God Name : மூலவர்: பரவாசுதேவர், உற்சவர்: ராஜகோபாலர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

பிரம்ம தேவர் தம்மையே பரமாக எண்ணிக் கொண்டு அகங்காரம் கொண்டதனால், படைப்புத் தொழிலை மறந்தார். இச்செயலுக்காக வருந்தி, இத்தலம் வந்து நீண்ட தவம் மேற்கொண்டார். துவாதசாட்சரத்தால் பெருமாளை பூஜித்து வழிபட்டார். பிரத்யட்சமான பரவாசுதேவர் பிரம்மாவுக்கு படைப்புத் தொழிலை புரிய அருள் புரிந்தார். வாசுதேவ மந்திரத்தை சித்தி செய்து அவருடைய அருளைப் பெற்ற பிரம்மா, ஒரு சுயம்பு விமானத்தை உண்டாக்கினார். அதில் தேவியர்களுடன் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு சேவை சாதிக்க வேண்டினார். அதன்படி பெருமாளும் இன்று வரை காட்சி தருவதாக ஐதீகம். கோபிலர், கோபிரளயர் எனும் இரண்டு முனிவர்கள் கண்ணபிரானை சேவிக்க துவாரகைக்கு பயணம் மேற்கொண்டனர். வழியில் ஓரிடத்தில் நிஷ்டையில் ஆழ்ந்தவர்கள், கலியுகம் துவங்கும் வரை நிஷ்டையில் இருந்தனர். துவாபர யுகத்திலேயே கண்ணன் பரமபதம் சென்று விட்டதை, பின்னர் நாரதர் மூலமாக அறிந்தனர். துவாரகை செல்லும் எண்ணத்தை கைவிட்டு, நாரதரின் யோசனையின் பேரில், இத்தலம் வந்து நீண்ட தவம் புரிந்தனர். பிரத்யட்சமான கண்ணனிடம் அவரது ஜலக்ரீடையைக் காண விரும்புவதாக தெரிவித்தனர். கண்ணனும் பதினாயிரம் கோபிகைகளுடன் கோபாலனாக ஹரித்ரா நதியில் ஜலக்ரீடை செய்தார். குளித்து முடித்த பின்னர் கரை மீது இருந்த வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கோபிகைகள் அணிந்து கொண்டனர். எஞ்சியிருந்த ஓர் ஓலை, ஒரு குண்டலம் இவற்றை அணிந்து கொண்டு, ருக்மணி, சத்யபாமாவுடன் காட்சிதந்த அதே ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக இன்றும் காட்சி தருவதாக ஸ்தல வரலாறு. செங்கமலத் தாயார் ப்ருகு மகரிஷியின் மகளாகப் பிறந்து பரந்தாமனையே மணந்ததாக வரலாறு. ஒரு இரவாவது இத்தலத்தில் தங்குபவர்கள், 1000 பசுக்களை தானம் செய்த பலனைப் பெறுவர் என மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குனி மாதத்தில் 18 நாட்கள் பிரம்மோற்சவம் மற்றும் விடையாற்றி உற்சவமும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். சேவார்த்திகள் பிரார்த்தித்துக் கொண்டு பெருமாள் மற்றும் தாயார் திருவடிகளுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர். 7 பிரகாரம், 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சந்நிதிகளை உள்ளடக்கி 33 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கோவில். கோவிலுக்கருகிலுள்ள கிருஷ்ண தீர்த்தம் அழகிய நீராழி மண்டபத்தோடு விளங்குகிறது. செண்பக பிரகாரத்தில் செண்பக மரங்கள் நிறைந்துள்ளன. கோவிலிலிருந்து 3 பர்லாங் தூரத்திலுள்ள ஹரித்ரா நதி முக்கிய தீர்த்தம். கோபியருடன் கோபாலன் ஜலக்ரீடை செய்தபோது பூசிக்கொண்ட மஞ்சள் நீரில் கரைந்ததினால் ஹரித்ரா நதி எனப் பெயர் கொண்டது. திருக்குளம் 1158 அடி நீளம், 847 அடி அகலம் கொண்டு 23 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இதை கோபால சமுத்திரம் என்றும் கூறுவர். இதில் ஸ்நானம் செய்தால் அஸ்வமேத யாகப்பலன் எனக் கூறுவர். இது ஒரு அபிமான ஸ்தலம்.
மூலவர்: பரவாசுதேவர்் உற்சவர்: ராஜகோபாலர்் தாயார்: செண்பகலட்சுமி் உற்சவத் தாயார்: செங்கமலத் தாயார். மூலஸ்தானத்தில் மூலவராக பரவாசுதேவர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை வைத்துள்ளார். சஹஸ்ரநாமமாலை அணிந்து தங்க கவசத்துடன் காட்சி தருகின்றார். பெருமாள் கையில் செண்டு என்ற மூன்று வளைவு கொண்ட பொற்கோல் வைத்துள்ளார். இதனால் செண்டலங்காரர் என்ற திருநாமமும் பெற்றார். ராஜாதி ராஜ விண்ணகரப் பெருமாள் என்ற திருநாமமும் உண்டு. செம்பிலாலான துவாரபாலக சிலைகள் இருபுறமும் கம்பீரமாக நிற்கின்றன. உற்சவராக எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராஜகோபாலர் ஒரு காதில் குண்டலம், ஒரு காதில் ஓலை அணிந்து, வலது கையில் வேத்ரம் எனப்படும் மும்மடிப்பு சாட்டையை வைத்துக் கொண்டு, பசுவுக்கு முன்பாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ருக்மணி, சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். மூலவரான தாயார் செண்பகலட்சுமி 'படி தாண்டா பத்தினி' எனப் போற்றப்படுகிறார். சந்நிதிக்கு முன்பாக ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. ஏகாதசியன்று பெருமாள் இங்கு எழுந்தருளுவார். உற்சவ தாயாராக செங்கமலத் தாயார் சேவை சாதிக்கின்றார். ஹேமாப்ஜநாயிகா எனப்படும் பொற்றாமரை செல்விக்கு தனிக் கோவில் நாச்சியார் சந்நிதி உள்ளது. தேரோடும் வீதி ஐந்தாம் பிரகாரத்தில் உள்ளது. ராமர் சந்நிதி, ராமர் பாதம், லட்சுமி நாராயணன், அனந்த பத்மநாபன், வைகுந்தவாசன், வெங்கடேசப் பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆழ்வாராதிகள், மணவாள மாமுனி ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். வெண்ணெய் குடத்தை அணைத்தபடி தவழும் நவநீத கிருஷ்ணன் எனப்படும் குழந்தை ராஜகோபாலனை கையில் ஏந்தி பிரார்த்தித்துக் கொண்டால் புத்திர பாக்கியம் நிச்சயம் கிட்டும். 52 அடி உயரம் கொண்ட கருடஸ்தம்பம் உள்ளது. அதன் உச்சியில் பெரிய திருவடி (கருடன்) அஞ்சலி ஹஸ்தராய், பெருமாளை வணங்கிய நிலையில் காணப்படுகின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.