அருள்மிகு சாட்சிநாயகேஸ்வரர் திருக்கோவில் (அவளிவநல்லூர்)
God Name : சாட்சிநாயகேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
இவ்வாலயத்தில் சிவபூஜை செய்து வந்த அர்ச்சகருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் சுசீலையை சம்புநாத சர்மா என்பவர் மணந்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு உடனே காசி யாத்திரையும் சென்று விட்டார். கணவன் தீர்த்த யாத்திரை போன பிறகு, சில நாட்கள் கழித்து, சுசீலையை வைசூரி தாக்கியதால் கண் பார்வை பறி போனது. பொலிவிழந்து குரூபியாக மாறி காணப்பட்டாள். பல மாதங்களுக்கு பிறகு காசி யாத்திரை சென்ற கணவன் ஊர் திரும்பினான். குரூபியாக இருப்பவள் தன் மனைவியே இல்லை என்றும், அருகே நின்ற அவளது தங்கையைக் காட்டி அவள்தான் தனது மனைவி என்றும் வாதிட்டான். பெற்றோரும் உற்றோரும் கூறுவதை ஏற்கவில்லை. அப்போது இறைவன் ரிஷபாரூடராய் எழுந்தருளி நீ அந்நாளில் மணந்து கொண்ட அவள் - இவளே என குரூபியாக இருந்த மூத்தவளை அடையாளம் காட்டினார். ஆலயத்தின் எதிரே இருந்த புஷ்கரிணியில் சுசீலையை நீராடச் செய்து, இழந்த கண் பார்வையையும் அழகையும் மீண்டும் கொடுத்தருளினார் என ஸ்தல வரலாறு. இந்நிகழ்வு தை அமாவாசையன்று நடந்ததால், ஆண்டுதோறும் தீர்த்தவாரி தை அமாவாசையில் நடக்கின்றது. அப்போது சாட்சிநாதர் தனது பரிவாரங்களுடன் எழுந்தருளுவார். அவள் - இவளே எனக் காட்டியதால் இவ்வூருக்கு அவளிவநல்லூர் எனப் பெயர் வந்தது. சுவாமிக்கு சாட்சிநாதர் என்ற பெயர் வந்தது. வராஹ அவதாரத்தின்போது சிவபெருமானால் கொம்பு முறியப் பெற்ற விஷ்ணு மூர்த்தி பூஜித்த ஸ்தலம். பஞ்ச ஆரண்யங்களில் இதை பாதிரி வனம் என்று கூறுவர். புல்லாரண்யம் என்ற பெயரும் உண்டு. தேவாரத் திருத்தலம் - பஞ்ச ஆரண்ய ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: சாட்சிநாயகேஸ்வரர், அம்பாள்: சௌந்தரநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சாட்சிநாயகேஸ்வரர். சுயம்பு லிங்கம். இவருக்கு சாட்சிநாதர், தம்பரிசறிவார் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. லிங்கத் திருமேனியின் பின்புறமாக - சாட்சிநாயகேஸ்வரரும் சௌந்தரநாயகியும் அழகு சுதை பிம்பங்களாக தரிசனம் தருகின்றனர். அம்பாள் சௌந்தரநாயகி பெயருக்கேற்றாற் போல் அழகே உருவாக எழுந்தருளி காட்சி தருகின்றாள். அழகம்மை என்று அழகு தமிழில் அழைக்கின்றனர். கோஷ்டத்து மூர்த்தங்களும், பரிவாரத் தேவதைகளும் அழகாக இருக்கின்றன. பிரகார வலச்சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய ஆறுமுகன், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர், கால பைரவர், அறுபத்திமூவர்கள் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். சாட்சி சொன்ன ரிஷபாரூடரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. நவகிரகங்கள் அனைத்தும் சூரியனை பார்த்தபடி உள்ளன. இத்தலத்து இறைவனை தரிசிக்க வேண்டிய நேரம்: காலை சந்தி நேர தரிசனம் விசேஷம் (கால சந்தி). காலை 9.30 மணியிலிருந்து காலை 10.00 மணிக்குள் தரிசனம் செய்வது நியதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.