அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் (பெரும்பேறு கண்டிகை)
God Name : தான்தோன்றீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
அகஸ்திய முனிவருக்கு திருமணக் கோலத்தில் இறைவன் தான்தோன்றீஸ்வரர் காட்சி தந்த ஸ்தலம் இது. மேலும், அகஸ்தியர் இங்கு தவம் மேற்கொண்டு இறைவனின் நடன தரிசனத்தைப் பெற்றுள்ளார்.
மூலவர் தான்தோன்றீஸ்வரர், அம்பாள் தடுத்தாட்கொண்ட நாயகி.
பேறை நகர் என்னும் வளமான ஊரில், 225 படிக்கட்டுகள் கொண்ட ஒரு குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது.
மூலஸ்தானத்தில், மூலவராக தான்தோன்றீஸ்வரர் சிவலிங்க வடிவினராக கம்பீரமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். இவர் சுயம்பு மூர்த்தம். அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி தந்த தான்தோன்றீஸ்வரர் இங்கு எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சந்நிதி. மணலால் உருவான லிங்கத்திருமேனி என்பதால், செப்புக் கவசமிட்டு அபிஷேகம் செய்கின்றனர்.
தெற்கு நோக்கிய சன்னதியில், அம்பாள் தடுத்தாட்கொண்ட நாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
சுற்றுப் பிரகாரத்திலுள்ள பரிகார தேவதைகளுள் ரணபத்ர காளி விசேஷமாக விளங்குகின்றாள். கனகதுர்கையின் புடைப்புச் சிற்பம் அற்புதம். அரிய பொக்கிஷமாக கோமதி சங்கு ஒன்றும் இங்கு இருக்கின்றது.
இத்தலத்தில் அகஸ்தியர் தவம் மேற்கொண்டு இறைவனின் நடன தரிசனத்தைப் பெற்றுள்ளார்.
ஷெண்பகவல்லி சஹித கைலாசநாதர் கோவில், அம்புஜவல்லி சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ தேவி பூதேவி சஹித ஆதிகேசவப் பெருமாள் கோவிலும் இவ்வூரில் இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.