அருள்மிகு மாதேவி மஹாமாரியம்மன் திருக்கோவில் (வலங்கைமான்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

சிவபெருமானின் வலக்கையில் மான் இருப்பதால் இவ்வூர் வலங்கைமான் எனப் பெயர் கொண்டது.
மூலஸ்தானத்தில் சீதளா தேவியாக மஹாமாரியம்மன் கருணையே வடிவாக, அலங்கார பூஷிதையாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சதுர்புஜங்களையுடைய அழகிய திருமேனி. மேற்கரங்களில் உடுக்கை, கத்தி ஆகியன கொண்டும், கீழ்கரங்களில் பாசமும், அக்னி சட்டியும் கொண்டும், சிரசை ஐந்துதலை நாகம் குடையாக அலங்கரித்தும் காட்சி தருகின்றாள். அழகான உற்சவ மூர்த்தங்கள். மகா மண்டபத்தில் இருளன், பேச்சியம்மன், இரு துணைவிகளுடன் மதுரைவீரன், விநாயகர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.00 மணிக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறும். கடைசி ஞாயிறன்று அன்னம் போன்று அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வரும் உற்சவம் நடைபெறும். பங்குனி மாதம் 10 நாட்கள் பெருவிழா. 2ஆம் ஞாயிறு பாடைக்காவடி விழா, 3ஆம் ஞாயிறு புஷ்ப பல்லக்கு. இவ்வூரில் பாடைக்காவடி விழா பிரசித்தம். கண் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள், பார்வைக் கோளாறு மற்றும் அம்மை நோய் கண்டவர்களுக்கு பரிகார ஸ்தலமாக உள்ளது. இவ்வூரில் காசி விஸ்வநாதர் கோயில் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.