அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில்
God Name : வில்வவனநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
கூவிளம் என்றால் வில்வம். இப்பகுதி முழுவதும் வில்வக் காடாக இருந்தமையால் கூவிளம்புதூர் எனப் பெயருற்று, பின்னர் நாளடைவில் மருவி கொள்ளம்புதூர் என்றானது. வில்வ ஆரண்யத்தில் எழுந்தருளிய இறைவன் என்பதால் வில்வவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். க்ஷேத்ராடனம் செய்து கொண்டிருந்த திருஞானசம்பந்தர் அப்பர் பெருமானோடு வேதாரண்யத்தில் தங்கி இருந்தபோது, சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரும்படி அழைப்பு வந்தது. கூன் பாண்டியன் சமணத்தை தழுவியதால், மக்களும் சைவத்தை துறக்கலாயினர் என செய்தி வந்தது. பாண்டிய நாட்டிற்கு போனால் ஞானசம்பந்தருக்கு ஆபத்து ஏதேனும் நேரிடுமோ? என அனைவரும் தடுத்தனர். இறைப்பணிதான் முக்கியம் என பாண்டியநாட்டிற்கு சென்றார் ஞானசம்பந்தர். அங்கு சென்றதும் சமணர்களை வென்று, சைவத்தை நிலைநாட்டி விட்டு திரும்பினார் என வரலாறு கூறுகிறது. இத்தலத்திற்கு அடியார்களுடன் வருகை தந்த சம்பந்தர், வெட்டாறு எனப்படும் முள்ளியாறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு திகைத்தார். தென்பட்ட ஓடம் ஒன்றில் அடியார்களுடன் புறப்பட்டார். வெள்ள ஓட்டம் அதிகமாக இருந்ததால் ஓடம் ஆட்டம் கண்டது. வில்வாரண்யேச்வரரை தரிசிக்க இயலாது போய்விடுமோ என அஞ்சி 11 பதிகங்களைப் பாடினார். பத்திரமாக கரை போய் சேர்ந்தார். ரிஷபாரூடராய் பார்வதி - பரமேச்வர தரிசனம் கிடைத்தது. குழுமியிருந்த அனைவர்க்கும் புண்ணியம் கிடைத்தது. ஐப்பசி அமாவாசை (தீபாவளி) தினம் சந்திரசேகரரும் கங்கையம்மனும் வெட்டாற்றிற்கு சென்று தீர்த்தம் கொடுக்கும் ஐதீகத்தை கொண்டாடுகின்றனர். அப்போது ஞானசம்பந்தரின் உற்சவ மூர்த்தம் ஓடத்தருகே வருவதும், ஸ்வாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் காட்சி தருவதும் பார்க்க கண் கொள்ளா காட்சி. இதை ஓடத்திருவிழா என்பர். அன்றிரவு அர்த்த ஜாம பூஜையை மறு நாள் காலை உஷத் கால பூஜையாக மாற்றி செய்யும்படி அசரீரி ஒலித்ததாம். தீபாவளியன்று மட்டும் இந்த ஐதீகத்தை சம்பிரதாயமாக கடைப்பிடிக்கின்றனர். இங்கு இறப்பவர்களின் வலது காதில் சிவபெருமான் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதுவதாக ஐதீகம். இதனால் இவ்வூரை பஞ்சாட்சரபுரம் என அழைக்கின்றனர். பஞ்ச ஆரண்யங்களுள் - வில்வாரண்யம் - தரிசிக்க உகந்த நேரம்: இரவு 8.30 மணி - 9.00 மணி. தேவாரத்திருத்தலம் - பஞ்ச ஆரண்யங்களுள் ஒன்று.
மூலவர்: வில்வவனநாதர், அம்பாள்: சௌந்தராம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான வில்வவனநாதர். அழகிய பெரிய திருமேனி. வில்வாரண்யேச்வரர் என்ற திருநாமமும் உண்டு. பெயருக்கேற்றவாறு அழகே உருவாக தரிசனம் தருகின்றாள் அம்பாள் சௌந்தராம்பிகை. அம்பாள் மண்டபத்து விதானத்தில் 12 ராசிகளின் புடைப்பு சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீஸ்வரர், பஞ்சலிங்கம், முருகப் பெருமான், நால்வர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.