அருள்மிகு நடுப்பழநி நாயகன் திருக்கோவில் (அச்சிறுபாக்கம் - பெருங்கரணை)

God Name : ஆறுமுகப் பெருமான்

தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்

காஞ்சிபுரம்

Call : +91-

முத்துசாமி எனும் முருக பக்தரிடம், முருகனே நேரில் தோன்றி, இந்த இடம் தனக்கு வேண்டும் என சுட்டிக் காட்டிய ஸ்தலம். பாலக வடிவில் வந்த முருகன் பணித்தபடி எழுப்பப்பட்ட ஆலயம். தற்போது மைசூர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளின் பராமரிப்பில் உள்ளது.
விழுதுகளுடன் கூடிய பத்து ஆலமரங்கள் நிழல் தர, பசுமையான இயற்கை சூழல் மிகுந்த குன்றின் அடிவாரம் உள்ள கிராமமான பெருங்கரணையில் 120 படிக்கட்டுக்களுடன் கூடிய குன்றின் மீது அமைந்த ஆலயம். வாகனங்களில் செல்ல பாதை வசதியும் உண்டு. குன்றின் அடிவாரத்துப் படிகள் தொடங்குமிடத்தின் இருபுறங்களிலும் இடும்பனும், ஆஞ்சநேயரும் தரிசனம் தருகின்றனர். அடுத்து வரும் மண்டபத்தில் சித்தி விநாயகர் ஒரு புறமும், கனகா தேவியான ராஜ ராஜேஸ்வரி மறு புறமும், மற்றும் நவகிரகங்களையும் தரிசிக்கலாம். சரவணப் பொய்கையும் அதன் கரையில் கார்த்திகைப் பெண்களும் - முருகனும் ஆறு வடிவங்களில் அழகிய சுதைச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளனர். அருகே சிவபெருமான் காட்சி தருகின்றார். அரசு/வேம்பு பிணைந்த விருட்சமும் நாகப் பிரதிஷ்டைகளும் உள்ளன. மூலஸ்தானத்தில் மூலவராக தண்டாயுதபாணி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். அழகிய மரகதப் பச்சை திருமேனி கொண்டுள்ளார். நடுப் பழனி நாயகர் என்று போற்றுகின்றனர். கல்யாண உற்சவராக வள்ளி-தெய்வயானை உடனாய முருகன் தரிசனம் தருகின்றார். ருத்ராட்ச பந்தலின் கீழ் மயில் மேல் ஆறுமுகன் எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் நாகப்படுக்கையில் எழுந்தருளியுள்ள நாக தத்தாத்ரேயர் விசேஷமானவர். அநக அம்மன் உடன் இருக்கின்றார். விநாயகர், லட்சுமி போன்ற மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.