அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவில் (இராப்பட்டீச்சுரம்)
God Name : சேஷபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
மூலவர்: சேஷபுரீஸ்வரர், அம்பாள்: அந்தப்புரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சேஷபுரீஸ்வரர். மூலவரின் திருமேனி மீது பாம்பு போன்ற வடிவம் காணப்படுவதால் சேஷபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அந்தப்புரநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
மஹாமண்டபத்தில் மிகப் பெரிய திருவுருவமாக காட்சி தரும் தட்சிணாமூர்த்திக் கடவுள் வித்தியாசமான அழகுடன் உள்ளார். சனகாதி முனிவர்கள் காணப்படுகின்றனர். நந்தியம்பெருமான் இவரைப் பார்த்தபடி எழுந்தருளியுள்ளார். லட்சுமி - சரஸ்வதி சந்நிதி கொண்டுள்ளனர்.
சிறப்பு மூர்த்தமான பைரவர் நெடிந்துயர்ந்த அழகிய திருமேனியுடன் தரிசனம் தருகின்றார். மிகுந்த வரபிரசாதி என்பர். தேய்பிறை அஷ்டமியில் தயிர்சாதம், வடை ஆகியனவற்றை வாழையிலையில் படைத்து நைவைத்யம் செய்கின்றனர்.
இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி, இவ்விறைவனை பிரதட்சிணங்கள் செய்து வழிபட்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது திண்ணம்.
நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.