அருள்மிகு சுப்ரமண்யஸ்வாமி திருக்கோவில் (என்கண்)

God Name : மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: சுப்ரமண்யஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் நாம் தரிசிக்கும் மயில் மீதமர்ந்த ஆறுமுகனை உருவாக்கியவர் ஒரே சிற்பி. சிக்கல் சிங்காரவேலனை வடித்தபோது, இது போன்ற அழகிய சிலை செய்வித்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என நினைத்த முத்தரச சோழன், அதை உருவாக்கிய சிற்பியின் கட்டைவிரலை எடுத்து விட்டான். இழந்த கட்டைவிரலுடன் சிற்பியால் வேறு எங்கும் சிலை செய்ய முடியாது என நினைத்தான். கட்டைவிரலை இழந்தும், இது போன்ற மற்றொரு அழகிய சிலையை, எட்டுக்குடியில் உருவாக்கினான் சிற்பி. கோபம் கொண்ட மன்னன் சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். மனம் நொந்து போன சிற்பி, இத்தலத்திற்கு வந்து சேர்ந்தான். தான் புதியதாக வடிக்க நினைத்த ஆறுமுகனின் திருவுருவத்தை தன் மனக்கண் முன் நிறுத்தினான். அந்த மானசீக திருவுருவத்தை வடிக்கலானான். அவனது பேத்தியான சிறுமி ஒருத்தி துணை நின்றாள். இரண்டு கண்களும் இல்லாமலேயே, அவன் செய்த சிலை மிகவும் நன்றாகவும், உயிரோட்டம் கொண்டதாகவும் அமைந்தது. அனைவராலும் பாராட்டப்பட்ட, தான் வடித்த இந்த ஆறுமுகனின் திருவுருவத்தை பார்க்க தனக்கு கண்கள் இல்லாமல் போய் விட்டதே என ஏங்கினான். சிலை முழுவதுமாக முடித்து, சிலையின் கண்களை திறக்க முற்பட்டபோது, முருகன் அருளால் இழந்த கண்களையும் கட்டை விரலையும் பெற்றான். கோவில் வாசலில் உள்ள வன்னி மரத்தடியில் சித்தியடைந்தான். சில்ப முனிவரின் உருவம் காணலாம். பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனை சிறை வைத்த முருகனை, மீண்டும் ஸ்ருஷ்டி தொழில் செய்ய வேண்டி தனது எட்டுக் கண்களால் பூஜை செய்தார் பிரம்மன். அதனால் எண்கண் என இவ்வூருக்கு பெயர் வந்ததாகக் கூறுவர். எனினும் இழந்த இரண்டு கண்களை சிற்பிக்கு திரும்ப கிடைக்கப்பெற்ற ஸ்தலம் என்பதால் எண்கண் எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது. பிருகு முனிவரின் சாபத்தினால் சிங்கமுகம் கொண்ட சிம்மவர்மன் தனது சிங்கமுகம் நீங்கி சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம்.
மூலவர்: பிரம்மபுரீஸ்வரர், அம்பாள்: பெரிய நாயகி. மூலஸ்தானத்தில் சதுர பீடத்தில் சிவலிங்க வடிவினராகக் காட்சி தரும் பிரம்மபுரீஸ்வரர் ஒரு வரப்பிரசாதி. கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி எழுந்தருளியுள்ளார். சிறப்பு மூர்த்தியாக முருகப் பெருமான் மூலவராக ஞான சபையிலும், உற்சவராக தேவ சபையிலும் காட்சி தருகின்றார். ஞானசபை: இத்தலத்தில் பிரம்மாவிற்கு உபதேசம் செய்ததால் குரு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். முருகப் பெருமான் குரு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் ஞானசபை எனப்படுகின்றது. தெற்கு பார்த்த சந்நிதி. ஸ்வாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் நடுவே முருகன் இருப்பதால் சோமாஸ்கந்த அமைப்பு எனலாம். தேவ சபை: உற்சவ மூர்த்தி ஆறுமுகன் மயில் வாகனராக எழுந்தருளியுள்ளார். பன்னிரு கரங்களில் - வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், அங்குசம், சேவற்கொடி ஆகியன கொண்டும், அபய-வரத முத்திரைகள் கொண்டும் தரிசனம் தரும் பேரழகன். முன்புறம் மூன்று, பின்புறம் மூன்று என ஆறுமுகங்களுடன் மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலம். பன்னிரண்டு கரங்களின் விரல்கள் தனித்தனியாக இடைவெளியுடன் காணப்படுகின்றன. அம்பறாத் துணியிலிருந்து இரண்டு விரல்களால் அம்பு உருவுவது போலவும், எதிர்ப்புற வில் அதற்கு ஏற்றார் போல் இயல்பாகவும் தத்ரூபமாகவும் உள்ளது. மயில் ஒரு காலைத் தூக்கி, மற்றொரு காலை ஊன்றி ஓட யத்தனிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. மயிலின் கால் நகங்கள் பூமியைப் பற்றி இருக்கும்போது ஏற்படும் நகக்கண் இடைவெளி கூட யதார்த்தமாகப் படைக்கப்பட்டுள்ளது. முழு மூர்த்தியின் எடையையும், மயிலின் ஒற்றைக்காலில் தாங்கி நிற்கும்போது ஏற்படும் அசைவுகளையும் சிற்பத்தில் படைத்திருக்கும் சிறப்பை வர்ணிக்க இயலாது. நேரில் பார்த்துப் பரவசப்படலாம். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் (தனித்தனி சிற்பங்களாக) உடன் உள்ளனர். உட்பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, சாஸ்தா, மஹாலட்சுமி, ஜேஷ்டா தேவி, துர்க்கை ஆகிய திருவுருவங்களை தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.