அருள்மிகு அகஸ்தீஸ்வரசுவாமி திருக்கோவில் (கிள்ளியூர்)
God Name : ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
அகஸ்தியர் தென்னகமெங்கும் பயணிக்கும்போது மக்களின் நன்மைக்காக ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இந்த லிங்க மூர்த்தங்கள் அகஸ்தியரின் பெயராலேயே அகஸ்தீஸ்வரர் என வழங்கலாயிற்று.
இவ்விறைவனை கிளி ஒன்று பூஜை செய்து நற்கதி அடைந்ததால் கிளிக்குடி என பெயருற்று, நாளடைவில் மருவி கிள்ளியூர் என்றானது. சாண்டில்யனின் கடல்புறா எனும் நாவலில் இவ்வூர் இடம் பெற்றுள்ளது.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர், அம்பாள்: கௌரி பார்வதி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். பெரிய திருமேனி கொண்டு கம்பீரமாகவும் தரிசனம் தரும் அழகான லிங்க ஸ்வரூபம். மேற்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் கௌரி பார்வதி அம்பாள் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சிவகாமசுந்தரி என்ற பெயரும் உண்டு.
வெளிப்புற மதிற்சுவரில் நாககன்னி இருக்கின்றாள். கன்னி மூலை கணபதி, சுப்ரமண்யர், கஜலட்சுமி, நடராஜர், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.