அருள்மிகு பத்ரவல்லீச்சரர் திருக்கோவில் (திருவீழிமழலை)

God Name : ஸ்ரீ பத்ரவல்லீசர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

புரூவரசு எனும் வடநாட்டு மன்னனின் மனைவி பத்ரவல்லிக்கு குமர கண்ட நோய் வந்தது. அதனால் அவதியுற்றவளை அழைத்துக் கொண்டு க்ஷேத்ராடனம் புறப்பட்ட மன்னன், இத்தலத்திற்கு வந்து பழுதடைந்த கோபுரங்களையும், மண்டபங்களையும் புதுப்பித்தான். தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி அதில் நீராடி, லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தினமும் வழிபட்டனர். இவ்விறைவனின் அருளால் அரசியின் நோய் நீங்கப் பெற்று நலன் பெற்றாள் என ஸ்தல வரலாறு. அரசியின் பெயராலேயே இறைவனும் இறைவியும் அழைக்கப்பட்டனர். இவ்வூருக்கு வேத பாராயணம் செய்ய வந்த பாலகிருஷ்ண சாஸ்திரிகள் காலப்போக்கில் புதையுண்டிருந்த இந்தக் கோவிலை கண்டுபிடித்து புதுப்பித்ததாக குறிப்பு ஒன்று கூறுகின்றது. குமரக் கண்ட நோய் முன் கழுத்தையும் முகத்தையும் முறுக்கி தோளின் பக்கத்தில் வைத்தல், கண், காது, உதடு, தாடை இவற்றைக் கோணச் செய்தல், ஜன்னி உபத்திரவத்துடன் வலிப்பு போன்றவை வருதல் ஆகிய கோளாறுகளை குமரக் கண்ட நோய் என்பார்கள். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டால், நோய் நீங்கி நலம் பெறலாம்.
மூலவர்: ஸ்ரீ பத்ரவல்லீசர், அம்பாள்: ஸ்ரீ பத்ரவல்லீச்வரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ பத்ரவல்லீசர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ பத்ரவல்லீச்வரி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விநாயகப் பெருமானையும், நந்தியம் பெருமானையும் தரிசிக்கலாம். வடமேற்கே, இத்தலத்தின் தீர்த்தமாக ஒரு பெரிய கிணறு உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.