அருள்மிகு ஜம்புகாரண்யேச்வரர் திருக்கோவில் (கூந்தலூர்)

God Name : மூலவர்: ஜம்புகாரண்யேச்வரர்் சிறப்பு மூர்த்தம்: குமரகுருபரன்

திருக்கழுக்குன்றம் கோவில்

கரூர்

Call : +91-

சிவபெருமானை நோக்கி நீண்ட காலம் தவமிருந்தார் உரோம மகரிஷி. பல சித்திகள் பெற்றதால் அவரது ரோமங்கள் பொன்னாக மாறி உதிர்ந்தன. தனக்கு ஏற்பட்ட சிறப்பாக கருதி கர்வம் கொண்டார் மகரிஷி. இவரது கர்வத்தினை அடக்க நினைத்த சிவபெருமான், உதிர்ந்தது போக மீதியிருந்தவற்றை சாதாரண கேசமாக மாற்றிவிட்டார். தனது அகங்காரத்தை விடுத்து (தவம் தொடர்ந்தார்). இங்குள்ள தீர்த்தக் குளத்தில் சீதா தேவி நீராடியபோது ஏழு முடிகள் உதிர்ந்தன. இதனால் 'கூந்தல் உதிர்ந்த ஊர்' எனப் பெயர் கொண்டு, நாளடைவில் கூந்தலூர் என்றானதாக கூறப்படுகிறது. தென்புறமாக சீதா குளம் இருக்கின்றது. 'ஜம்பு' என்றால் நரி. நரிகள் நிறைந்த ஆரண்யம் என்பதாலும், நரி வழிபட்ட இறைவன் என்பதாலும் இவ்விறைவனுக்கு ஜம்புகாரண்யேச்வரர் என்ற பெயர் வந்தது. இது ஒரு தேவார வைப்புத்தலம்.
மூலவர்: ஜம்புகாரண்யேச்வரர்் சிறப்பு மூர்த்தம்: குமரகுருபரன். அம்பாள்: ஆனந்தவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஜம்புகாரண்யேச்வரர் எழுந்தருளியுள்ளார். மூன்றடி உயரம் கொண்ட பாணத்துடன் கூடிய அழகான திருமேனி. கருவறை வாயிலில் துவார கணபதியும் துவார பாலசுப்ரமண்யனும் தரிசனம் தருகின்றனர். தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் ஆனந்தவல்லி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சிறப்பு மூர்த்தமான குமரகுருபரன் எழுந்தருளி அருள் புரிகிறார். வலப்பக்கமாக மயிலின் முகம் உள்ளதால் தேவமயில் என்பார்கள். சந்நிதியின் முன்பாக சனீஸ்வரரும் இடும்பனும் காட்சி தருகின்றனர். கலங்காமல் காத்த விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. உரோம மகரிஷி உருவம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவிலும் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.