அருள்மிகு கைலாஸநாதர் திருக்கோவில் (விஷ்ணுபுரம்)
God Name : ஸ்ரீ கைலாஸநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
கரூர்
Call : +91-
திருவீழிமழலையில் சக்ராயுதம் பெற்ற திருமால், மாப்பிள்ளைசாமி - காத்யாயினி திருமணம் முடிந்ததும் அவர்களை பூஜிக்கும் பொருட்டு அரிசொல் நதியை வரவழைத்தார். அரிசொல் நதிக்கரையின் தென்கரையில், கௌதம மகரிஷி ஓர் ஆலயம் ஸ்தாபித்து அதில் கைலாஸநாதரையும் அமிர்தேச்வரியையும் பிரதிஷ்டை செய்தார்.
மஹாவிஷ்ணுவே இங்கு நேரில் தோன்றி தரிசனம் தந்ததால் விஷ்ணுபுரம் எனப் பெயர் கொண்டது.
முட்டையாறு எனப்படும் க்ஷீர நதியும், அரிசொலாறும் சங்கமம் ஆகுமிடத்தில் (திருவீழிமழலை) இவ்வூரை சேர்ந்த ஆடவரும் பெண்டிரும் ஸ்நானம் செய்வார்கள். தை அமாவாசையில் தொடங்கி, சிவராத்திரி அமாவாசை வரை விடியற்காலை வேளையில் ஸ்நானம் செய்வார்கள்.
மூலவர்: ஸ்ரீ கைலாஸநாதர், அம்பாள்: ஸ்ரீ அமிர்தேச்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ கைலாஸநாதர் எழுந்தருளியுள்ளார். பெரிய பாணத்துடன் கூடிய சிவலிங்கம். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. அம்பாள் ஸ்ரீ அமிர்தேச்வரி உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
பிள்ளையார், முருகன் இருவரும் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளனர். பெரிய கற்சிலையாக காட்சி தரும் கால பைரவரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
இவ்வூரில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் வீழிநாத ஐயன், சேத்தி விநாயகர், ஸ்ரீ ராமர், வரதராஜப் பெருமாள் ஆகியோரை சேவிக்கலாம்.
ஸ்ரீ தர்ம விநாயகர், ஸ்ரீ தர்மபுரீச்வரர், ஸ்ரீ தர்மசம்வர்த்தினி எழுந்தருளியுள்ள மற்றொரு சிவாலயமும் உள்ளது. சீதளாம்பிகை மாரியம்மன் கோவிலும் இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.