அருள்மிகு விஸ்வநாத ஸ்வாமி திருக்கோவில் (தேப்பெருமாநல்லூர்)
God Name : ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி, சிறப்பு மூர்த்தி: ஸ்ரீ அன்னதான தட்சிணாமூர்த்தி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
உலகை பிரளய வெள்ளம் சூழ்ந்த நேரத்தில், இத்தலம் மட்டும் ஜலமே இல்லாது இருப்பது கண்டு, பிரம்மன் இத்தலம் வருகிறார். இவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு புஷ்பம் மலர்கிறது. இங்குள்ள மூலவரை தரிசனம் செய்ய வந்தபோது, ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி பிரம்மனுக்கு ஜோதிர்லிங்கமாக காட்சி தருகிறார்.
அதிசயித்த பிரம்மன் மஹாவிஷ்ணுவிடம் சென்று இத்தலத்தைப் பற்றிக் கேட்கிறார். மூன்று அவதாரங்கள் எடுத்தால்தான் இத்தலத்தைப் பற்றி பூரணமாக அறிய முடியும் என விஷ்ணு கூறுகிறார். உடனே பிரம்மா மஹாகணபதியை நோக்கி தவம் மேற்கொள்கிறார்.
மஹாகணபதி மூன்று அவதாரங்கள் எடுக்கிறார். அதாவது, மாயரூபமாக தனது நேத்ரத்தை விழித்துப் பார்த்தல்் மனித ரூபமாக நரம்புகள் - நகங்கள் பிரதிபலித்தல்் மிருக ரூபமாக மண்டை ஓட்டை இடுப்பில் அணிதல். இதன் பிறகு இந்த க்ஷேத்ரத்தைப் பற்றி அறிந்து கொண்டு அதை பிரம்மனுக்கு விவரிக்கின்றார்.
ஆதிசக்தி கடுந்தவம் புரிந்து தனது தவ வலிமையினால் ஏனைய தெய்வங்களையும் அவர்களின் ஆற்றலையும் ஒரு குடத்தில் அடைத்து வைத்து மாயாநிதியாக மாறி விடுகிறாள். பரமேஸ்வரனை அழைக்கின்றாள். அதற்கு பரமேஸ்வரன், மாயாநிதியிடம் 'நான் உனக்கு வேண்டும் என ஆசைப்பட்டால், எனக்கு நீ அடிமை என எழுதிக் கொடுக்க வேண்டும்' என்கிறார்.
பாதரசத்தால் அவர் கூறியபடி எழுதி மேலிருந்து தூக்கிப் போட்டாள் மாயாசக்தி. அதில் ஒரு சொட்டு கூட சிந்தக் கூடாது என்ற நிபந்தனை வேறு விதித்தாள். பரமசிவன் அதை கையில் பிடிக்க முயற்சித்தார். நான்கு பாகங்களாக சிதறி, ஒரு சொட்டு பூமியில் விழுந்து விடுகிறது. அதைக் கண்டு மாயாநிதி ஏளனமாக சிரிக்கின்றாள். இதனால் கோபம் கொண்ட பரமேஸ்வரன் தனது நெற்றிக் கண்ணை திறந்து மாயாநிதியை பஸ்பமாக்கி விடுகிறார். மாயாநிதியின் பஸ்பமும் பாதரசமும் சேர்ந்து உருவான ஊரே தேவராஜபுரம் என்கின்ற தேப்பெருமாநல்லூர்.
பின்னர் பரமேஸ்வரன் விஸ்வரூபம் எடுக்கிறார். பார்வதி தேவி நான்கு வேத மந்திரங்களை சொல்கிறாள். இதனால் அம்பாளுக்கு வேதாந்த நாயகி என்ற பெயர் உண்டானது.
அந்த சமயத்தில் சிவபெருமானை ஏழேகால் நாழிகை பிடிப்பதற்காக சனி பகவான் வந்தார். ஸ்வாமி அப்போது இத்தலத்திலுள்ள அரச மரத்தடியில் மறைந்திருந்தார். 'ஸ்வாமி எங்கே?' என கேட்ட சனி பகவானிடம், 'முடிந்தால் ஸ்வாமியை பிடித்துக் கொள்' என அம்பாள் கூறினாள். அந்த இடத்தை விட்டு நகராமல் நின்ற சனி பகவான் ஏழேகால் நாழிகை முடிந்த உடன் புறப்பட்டார். 'ஸ்வாமியை பிடிக்க முடியவில்லை என ஒப்புக் கொள்கிறாயா?' என அம்பாள் கேட்க, அதற்கு சனி பகவான் 'அரச மரத்தடியில் ஒளிந்திருந்தாரே.. அந்த ஏழேகால் நாழிகைதான் நான் அவரை பிடித்த நேரம்' என பதிலளிக்கிறார்.
கோபம் கொண்ட பரமேஸ்வரன் மஹா மந்திர பைரவர் வடிவம் கொண்டு, சனி பகவானை இரண்டாக கிழித்து மாலையாக போட்டுக் கொள்கிறார். சனி பகவானை சம்ஹாரம் செய்த பாவம் கொண்டதால் சிவபெருமானால் விஸ்வரூபம் எடுக்க முடியவில்லை. இதை அங்கு வந்த நாரதர் எடுத்துக் கூறினார்.
உடனே பரமேஸ்வரன், 12 ஜோதிர்லிங்கங்களின் மந்திர கோஷங்களுடன் கூடிய ஸ்லோகத்தை சொல்ல ஆரம்பித்தார். 12 ஜோதிர்லிங்க பரமேஸ்வரர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இதைக் கண்ட நாரதர், '12 பேரும் இங்கு வந்ததால் இது புண்ணிய க்ஷேத்ரம்' என்று கூறிச் சென்றார்.
பரமேஸ்வரனும் விஸ்வரூபம் எடுத்து பாணபுரீஸ்வரராக மாறி, அமிர்த கலயத்தை பாணம் செய்து ஜீவராசிகளை உருவாக்க வழி வகுத்து விட்டு, விஸ்வநாத ஸ்வாமியாக இந்த க்ஷேத்ரத்தில் அமர்ந்தார். மேற்கண்ட க்ஷேத்ர மகிமையை விநாயகப் பெருமான் பிரம்மாவிற்கு எடுத்துரைத்தார் என ஸ்தல வரலாறு.
விஸ்வநாத ஸ்வாமியை தரிசித்து மறு பிறவி இல்லாமல் ஆக்கிக் கொள்ள நினைத்து அவரை தரிசிக்க வந்த அகஸ்தியரை, வழி மறித்து தடுத்தாட்கொள்ளும் எண்ணத்தில் மகரந்த மகரிஷி என்பவர், மகரந்தப் பூக்களாக பூத்து வழி மறித்தார். 'ஸ்வாமியை அலங்கரிக்கும் உன்னை என் பாதங்களால் மிதிக்க மாட்டேன், வழி விடு' என அகஸ்தியர் கூற, 'முடியாது' என மறுத்தார் மகரந்த மகரிஷி. இதனால் கோபம் கொண்ட அகஸ்தியர் 'யாழி முகத்துடன் அலைவாயாக' என சாபம் கொடுத்து விடுகிறார்.
விமோசனம் வேண்டி நின்ற மகரந்த மகரிஷியிடம், 'உலகில் யாருமே பூஜை செய்யாத பொருளைக் கொண்டு விஸ்வநாதரை பூஜித்தால் விமோசனம் கிடைக்கும்' எனக் கூறிவிட்டு ஸ்வாமியை தரிசிக்காது சென்று விடுகிறார் அகஸ்தியர்.
யாழி முகத்துடன் பூஜை செய்ய ஆரம்பித்த மகரந்த மகரிஷி, ஒவ்வொரு நாள் ஒரு வித மலர், ஒரு வித இலை என மாற்றி மாற்றி 50 வருடங்களாக பூஜை செய்கின்றார். மணல், கல், அரிசி, நெல், தானியங்கள் என பல விதமான பொருட்களைக் கொண்டு பூஜித்தும் விமோசனம் கிடைக்கவில்லை. அவர் பூஜை செய்யாத பொருளே கிடையாது.
ஒரு நாள் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் எடுத்து வர கிளம்பும்போது, எதேச்சையாக அவரது கழுத்தில் இருந்த ருத்ராட்சம் கழன்று ஸ்வாமியின் சிரசில் விழுந்தது. லிங்கம் உடனே ஜோதியாக ஜொலித்தது. இதைக் கண்ட மகரந்த மகரிஷி, 'ருத்ராட்சத்தால் யாரும் அர்ச்சனை செய்தது கிடையாது' என்று அனுமானித்து, ஒரு முக ருத்ராட்சத்திலிருந்து பதினாலு முக ருத்ராட்சம் வரை அர்ச்சனை செய்தார். அவருக்கு காட்சி தந்த இறைவன் அவரது சாபத்தைப் போக்கினார் என ஸ்தல வரலாறு.
சாபத்தினால் அகண்ட சரீரம் பெற்ற அன்னப்பட்சி ஒன்று, சாப நிவர்த்தி பெற இத்தலத்திலுள்ள ஸ்ரீ அன்னதான தட்சிணாமூர்த்தியின் பார்வை பட வேண்டி இங்கு வந்து வழிபட்டது. சாப நிவர்த்தி கிடைக்கவில்லை. பூலோகத்திலுள்ள அனைவரும் அன்னக் கஷ்டம் கொண்டனர். அஷ்ட நாகங்களும், ஸ்ரீ நந்திகேஸ்வரரும் வந்து அன்னதான தட்சிணாமூர்த்தியை பூஜித்தனர். அப்படியும் மாற்றமொன்றும் இல்லை. பரமேஸ்வரனே வந்து பூஜை செய்தார். அன்ன தரித்ரம் அவரையும் பற்றிக் கொண்டது. கடைசியில் பழையது (நீர் ஊற்றிய பழைய சாதம்) வைத்து நைவேத்யம் செய்கிறார் பரமேஸ்வரன்.
இதனால் மனம் குளிர்ந்த அன்னதான தட்சிணாமூர்த்தி அன்னப்பறவைக்கு சாபவிமோசனம் அளித்தார். அன்னக் கஷ்டமும் நீங்கி ஊர் சுபிட்சமானது என ஸ்தல வரலாறு.
இவ்வூரைச் சேர்ந்த பிரசீன சம்ப்ரதாய நாட்டிய நாடக மன்றக் குழுவினர் ஊர் ஊராக சென்று பிரகலாதன் நாடகம் போடுவது வழக்கம். அப்படி ஒரு நாடக சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தபோது, அவர்களது உடைகள் வைத்திருக்கும் பெட்டியில் நிறைய தேள் இருந்தனவாம். அது முதல் இவ்வூர் தேள்பெருமாநல்லூர் எனப் பெயர் கொண்டதாக குறிப்பொன்று கூறுகிறது.
2010 ஆம் ஆண்டு ஒரு நாள் இக்கோவிலில் நடந்த அதிசய நிகழ்வு என ஊர் மக்கள் கூறுவது, ஒரு நாகப்பாம்பு வில்வ மரமேறி வில்வ இலையை வாயால் கவ்வி பறித்து எடுத்துக் கொண்டு, அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியே கர்ப்பக்ரஹத்திற்குள் சென்று, ஸ்வாமியின் மீது ஏறி வில்வார்ச்சனை செய்தது என்பதாகும்.
இதைப் பற்றிய செய்திகள் புகைப்படங்களுடன் கோவிலில் ஒட்டி வைத்துள்ளனர்.
மூலவர்: ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி. சிறப்பு மூர்த்தம்: ஸ்ரீ அன்னதான தட்சிணாமூர்த்தி. அம்பாள்: ஸ்ரீ வேதாந்த நாயகி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார். தேஜோ மயமாக ஒளி வீசும் அழகிய திருமேனி. ருத்ராட்சங்களால் திருமேனி சுற்றப்பட்டிருப்பதால், ஸ்ரீ ருத்ராட்சேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. இவரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பர்.
மகரந்த மகரிஷி என்பவர் இவ்விறைவனை ருத்ராட்சம் கொண்டு பூஜித்ததால், தொடர்ந்து பூஜை முறைகள் அப்படியே உள்ளன.
அம்பாள் ஸ்ரீ வேதாந்த நாயகி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். கருணை பொழியும் தோற்றம் கொண்டு, சர்வாலங்கார பூஷிதையாக காட்சி தருகின்றாள்.
கபால மாலையை இடுப்பில் அணிந்த கபால விநாயகரின் எழில் வடிவம் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
ஸ்ரீ நந்திகேஸ்வரரை வாகனமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அன்னதான தட்சிணாமூர்த்தி மிகுந்த வரப்பிரசாதி. இவரை வழிபடுவோர்க்கு சர்ப்ப தோஷங்கள் நீங்கும். ராகு தசை - ராகு புக்தி, கேது தசை - கேது புக்தி இவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் விலகும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.