அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோவில் (திருநீலக்குடி - தென்னலக்குடி)

God Name : நீலகண்டேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

சரீர தியாகம் செய்யும் தாட்சாயினி, ஹிமவான் மகளாகப் பிறந்து மீண்டும் பரமசிவனை மணக்க வேண்டுகிறாள். தட்சனின் நடத்தையால் ஏற்பட்ட கோபாக்னி தணியாத பூவுலகில், வில்வாரண்யமாகிய திருநீலக்குடி க்ஷேத்திரத்தில் தவமிருந்து, "அங்கிருக்கும் எனக்கு தைலாபிஷேகம் செய்து, என் கோபத்தை தணிப்பாயாக" எனக் கூறினார். ஆகையால் இவ்வாலயத்தில் தைலாபிஷேகம் நடக்கிறது. அம்பாளே எண்ணெய் தேய்ப்பதாக ஐதீகம். பாற்கடல் கடையும்போது உருவான ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் தொண்டைக்குழியை உமையவள் பிடித்து விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டேஸ்வரர் எனப் பெயர் கொண்ட இவ்விறைவன் கொண்ட விஷத்தன்மையை இறக்க தைலாபிஷேகம் செய்வதாகவும் கூறப்படுகிறது. மிருகண்டு மகரிஷி தன் மகன் மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக இருக்க வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்க, வசிஷ்டரின் உபதேசப்படி பல ஸ்தலங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்து கொண்டு வருகையில் இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார் மார்க்கண்டேயர். பிரத்யட்சமான சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தை அருளுகிறார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஊர்வசியைப் பார்த்து சலனமுற்ற பிரம்மா, இங்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து நீண்ட காலம் தவம் இருந்து வழிபட்டார். வசிஷ்டரின் சாபம் கொண்டு யாகத்திற்கு தகுதியில்லாமல் போன காமதேனுவும், காமதேனுவை கோபித்த வசிஷ்டரும் ஸ்ரீ மனோக்ஞ நாதரை வழிபட்டு நற்பலன் பெற்றனர். மரணபயம் உள்ளவர்கள், ராஹு தோஷம் கொண்டவர்கள் இத்தலத்திற்கு வந்து - நீல நிற வஸ்திரம், உளுந்து, எள், வெள்ளியாலான நாகர் இவற்றை தானம் செய்தால் நற்பலன்கள் பெறுவர். வடக்கு பிரகாரத்திலுள்ள பலாமரத்து பலாப்பழத்தை, ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்த பின்னர் எடுத்துச் சென்று தின்றால் சுளைகள் சுவைக்கும்் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்றால் புழுக்கள் நொழியும் என்று கூறுகிறார்கள்.
மூலவர்: நீலகண்டேஸ்வரர். ஸ்ரீ அநூபமஸ்தினி, ஸ்ரீ பக்தாபீஷ்டதாயினி என்ற இரண்டு அம்பிகைகள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான நீலகண்டேஸ்வரர். ஸ்ரீ மனோக்ஞ நாதர், ஆதி மத்தியார்ஜுனேசர், பிரம்ம நாயகர், வில்வாரண்யேச்வரர், தைலாப்யங்கேசர் போன்ற திருநாமங்களும் உண்டு. ஸ்வாமிக்கு தைலாபிஷேகம் செய்வது இத்தலத்தின் சிறப்பு. ஆறு மரக்கால் (12 படி) நல்ல எண்ணையால் அபிஷேகம் செய்வார்கள். உளுத்த மாவினால் கோமுகத்தை அடைத்துவிட்டு, சிவலிங்கத்தின் சிரசில் நல்ல எண்ணையை விட்டு சிவாச்சாரியார் தேய்ப்பார். அத்தனை எண்ணையையும் சிவலிங்கம் இழுத்துக் கொள்ளும். கருங்கல் லிங்கத்திற்குள் எண்ணெய் எப்படி இறங்குகிறது என்பது அதிசயம். மாதந்தோறும் சித்திரை நட்சத்திர நாளில் கிரகண காலத்தில் தைலாபிஷேகம் செய்கின்றனர். ஸ்வாமி கோவிலின் வடபிரகாரத்தை அடுத்துள்ள தனி மண்டபத்தில் அடுத்தடுத்து இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. ஸ்ரீ அநூபமஸ்தினி, ஸ்ரீ பக்தாபீஷ்டதாயினி என்ற இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ பக்தாபீஷ்ட தாயினி தவக் கோலத்தில் இருப்பவள். ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய எடுத்துச் செல்லப்படும் தைலம் இந்த சந்நிதியில் வைத்து, அம்பாளின் உத்தரவு பெற்று பின்னர் எடுத்துச் செல்லப்படுகிறது. ஸ்ரீ அநூபமஸ்தினி எனும் அழகாம்பிகை தவம் முடித்து இறைவனை மணந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். ஆலயத்து முன் மண்டபத்தில், பிரம்மா பூஜித்து வழிபட்ட பிரம்ம லிங்கமும், மார்க்கண்டேயர் பூஜித்து வழிபட்ட லிங்கமும், மார்க்கண்டேயரின் உற்சவ விக்ரஹமும் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.