அருள்மிகு ஐராவதேச்வரர் திருக்கோவில் (மருத்துவக்குடி)

God Name : ஸ்ரீ ஐராவதேச்வரர். சிறப்பு மூர்த்தம்: விருச்சிக விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

துர்வாச மகரிஷி சிவலிங்கத்தை பக்தி சிரத்தையோடு வழிபட்டு ஆராதித்து வந்தார். செண்பக, எருக்க மலர்களால் தொடுத்த மாலையை சிவலிங்கத்திற்கு அணிவித்து பூஜிப்பார். அப்படி பூஜித்த மாலையை கையில் எடுத்துக்கொண்டு செல்கையில், எதிர்ப்பட்ட இந்திரனிடம் அதைத் தந்தார். அதை வாங்கிய இந்திரன் அசிரத்தையாக ஐராவதத்தின் (யானையின்) தலையில் வைத்தான். யானையோ தனது துதிக்கையால் எடுத்து கீழே போட்டு காலால் மிதித்தது. இதைப் பார்த்து கோபம் கொண்ட துர்வாசர், இந்திரனையும் அவனது ஐராவதத்தையும் சபித்து விடுகிறார். துர்வாசரின் சாபத்தால் கருத்த நிற யானையாகிப் போன ஐராவதம், இத்தலத்து சந்திர தீர்த்தத்தில் மூழ்கி, இத்தலத்து இறைவனை அபிஷேகித்து வழிபட்டது. இப்படி தொடர்ந்து 12 ஆண்டுகள் வழிபட்டு தான் கொண்ட சாபத்தைப் போக்கிக் கொண்டது. ஐராவதத்திற்கு அருள் புரிந்த சுவாமி என்பதால், இறைவன் ஐராவதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். துர்வாசரின் சாபத்தால் ஐஸ்வர்யங்களை இழந்த இந்திரன், இவ்விறைவனை வழிபட்டு பூஜித்து வந்தான். ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோத்ஸவம் நடத்தி, இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் என வரலாறு கூறுகிறது. பூகைலாசம், தட்சிண கைலாசம், கதம்பவனம், ஐராவதபுரம், ஆதிசேஷபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. அகஸ்தியர், வாம தேவர், கௌசிகர், விஸ்வாமித்ரர், காளவர், வேதமுனி, கரசர், காலர், வியாசர், குத்ஸர், பரத்வாஜர், ஜாபாலி, சந்திரன், பதஞ்சலி, வியாக்ரபாதர், இந்திரன், ஐராவதம், மருத்துவாசுரன், பிரம்மன், அக்னி, லட்சுமி, ஆதிசேஷன் ஆகியோர் வரங்கள் பெற்ற ஸ்தலம். எள்தானம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு பிராம்மணன், பாவங்களை நிறைய சேர்த்துக் கொண்டே போய் பிரம்ம ராட்சஸன் உருவம் பெற்றான். ஒரு நாள் வாம தேவரைப் பிடித்துத் தின்ன முயல, அவர் தரித்திருந்த திருநீறு அவன் மீது பட்டதும் தனது உண்மை நிலை உணர்ந்து, இங்குள்ள வில்வாரண்யத்தில் 12 ஆண்டுகள் தவம் மேற்கொண்டு, 12 சிம்ம பலத்தை தன்னுடைய கரங்களுக்குப் பெற்றான். வாயு மண்டலம் வரை வடிவம் கொண்டு மருத்துவாசுரன் என்ற பெயரைப் பெற்றான். அனைவரையும் இம்சித்து வந்த மருத்துவாசுரன், இந்திரனை வெல்லப் புறப்பட்டபோது, சிவபெருமானால் அனுப்பப்பட்ட அகோரமூர்த்தியால் தோல்வி கண்டான். அவனது வேண்டுகோளின்படி, இத்தலத்திற்கு அவனது பெயர் ஏற்பட்டது. தேவார வைப்புத்தலம் - ஆறு அபிராமி க்ஷேத்திரங்களில் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ ஐராவதேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ அபிராமி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஐராவதேஸ்வரர். வெண்மை நிற திருமேனியுடன் கவசம் சாத்தப்பட்டுள்ளது. சுயம்பு லிங்க மூர்த்தம். முன் மண்டபத்துடன் கூடிய சந்நிதியில் தெற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ அபிராமி. அட்சமாலை, பத்மம் கொண்ட மேற்கரங்களும், வரத, ஊரு ஹஸ்தங்களாகக் கீழ்க்கரங்களும் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி கொண்டு தரிசனம் தருகின்றாள். மஹா கணபதி, முருகப் பெருமான், நடராஜர், சோமாஸ்கந்தர், பைரவர், சூரியன் ஆகிய மூர்த்தங்கள் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். விருச்சிக விநாயகரின் தும்பிக்கை விசேஷமானது. விஷ ஜந்துக்களின் கடியால் உண்டான உபாதைகளிலிருந்து விடுபட, இவரைப் பிரார்த்திக்கின்றனர். இக்கோயில் செம்பியன்மாதேவியால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தீர்த்தங்கள்: 1. சந்திர தீர்த்தம் - அதன் கரையில் அரச மரம். சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் ஸ்நானம் செய்வது விசேஷம். 2. அக்னி தீர்த்தம் - அதன் கரையில் வில்வ மரம். வைகாசி மாத பஞ்சமி, செவ்வாயுடன் கூடிய அஷ்டமி தினங்களில் ஸ்நானம் செய்வது விசேஷம். அக்னி பகவானால் உண்டாக்கப்பட்ட இத்தீர்த்தம், கோயிலின் தென் கிழக்கே, சந்திர தீர்த்தத்தின் தென் பக்கம் உள்ளது. 3. யம தீர்த்தம் - அதன் கரையில் ஆல மரம். கிருஷ்ண சதுர்த்தசி, அஷ்டமி, புரட்டாசி அமாவாசை தினங்களில் ஸ்நானம் செய்வது விசேஷம். யமனால் உருவாக்கப்பட்டது. அக்னி தீர்த்தத்தின் மேற்கே உள்ளது. 4. பிரம்ம தீர்த்தம் - அதன் கரையில் புன்னை மரம். ஆடி மாத சதுர்த்தசி தினத்தன்று ஸ்நானம் செய்வது விசேஷம். பிரம்மா உருவாக்கியது. 5. காச்யப தீர்த்தம் - அதன் கரையில் வில்வ மரம். பஞ்சமியுடன் கூடிய செவ்வாயில் ஸ்நானம் செய்வது விசேஷம். காச்யபரால் உருவாக்கப்பட்டது. 6. கௌதம தீர்த்தம் - அதன் கரையில் நெல்லி மரம். கௌதமரால் உருவாக்கப்பட்டது. 7. சேஷ தீர்த்தம் - எனப்படும் ம்ருத சஞ்சீவினி தீர்த்தம். ஆவணி சுக்லபட்ச சதுர்த்தசி, மார்கழி மாத சப்தமி, வைகாசி அட்சயம், கார்த்திகை மாதத்தின் 4 சோம வாரங்கள் - ஸ்நானம் செய்வது விசேஷம். ஆதிசேஷனால் உருவாக்கப்பட்டது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.