அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (ஆடுதுறை)

God Name : ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

இத்தலத்திலுள்ள பவழமல்லி மரத்தடியில் ஒளிந்து கொண்டு சுக்ரீவன், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வந்தான். வாலிக்குப் பயந்தே இங்கு தஞ்சமடைந்தான். சுக்ரீவன் இங்கு ஒளிந்திருப்பதை தெரிந்து கொண்ட வாலி, சுக்ரீவனைத் தேடி இங்கு வந்தான். தன்னை வாலியிடமிருந்து காப்பாற்ற வேண்டி நின்ற சுக்ரீவனை, வாலி வரும் நேரம் பார்த்து அன்னப்பறவையாக மாறச் செய்து விட்டார் சுவாமி. சுக்ரீவனை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் சுவாமிக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் வந்தது. பவழமல்லி மரத்தையும் சேர்த்து சிவசக்தி ஸ்வரூபமாக சுக்ரீவன் வழிபட்டு வந்ததால், அம்பாளுக்கு ப்ரபாளவல்லி (அல்) பவளக்கொடி எனப் பெயர் வந்தது. கோவிலின் இரண்டாம் வாசலின் மேல் காணப்படும் சுதை சிற்பங்கள் - சுக்ரீவன் சிவ பூஜை செய்வது, பின்னர் சுவாமி அவனை அன்னப்பறவையாக மாற்றுவது போன்ற காட்சிகளை விளக்குகின்றன. இங்கு சுவாமியே ஏற்படுத்திய தீர்த்தம் சூரிய தீர்த்தம். இந்த தீர்த்தத்தில்தான் சூரிய ஒளி பிரதிபலித்து சுவாமி மீது படர்கிறது. சுவாமி இருக்கும் மட்டத்திற்கே தீர்த்தக் குளமும் இருப்பதால் மட்டக்குளம் என்று கூறுவர். அம்பாள் உண்டாக்கிய தீர்த்தம் சந்திர தீர்த்தம். தஞ்சை மாவட்டத்தில் இரண்டு குரங்காடுதுறைகள் இருப்பதால், வட குரங்காடுதுறை மற்றும் தென் குரங்காடுதுறை என அடையாளம் காணப்பட்டது. இதில் தென் குரங்காடுதுறையைத்தான் சுருக்கி ஆடுதுறை என அழைக்கின்றனர். கோவில் உள்ள பகுதி நடராஜபுரம் எனப்படுகிறது. தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ ஆபத்சகாயேச்வரர், அம்பாள்: ஸ்ரீ பவளக் கொடியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ஆபத்சகாயேச்வரர். அழகிய லிங்கத் திருமேனி. சித்திரை மாதம் 5, 6, 7 தேதிகளில் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் தீர்த்தத்தில் பிரதிபலித்து நேரே சென்று சுவாமியைத் தழுவி சூரிய பூஜை செய்கின்றன. கிழக்கு பார்த்த சந்நிதி. சுவாமிக்கு வலப்புறமாக தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஸ்ரீ பவளக் கொடியம்மை எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். சந்நிதியின் எதிர் தூணில் வானரம் ஒன்று சிவபூஜை செய்யும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள நடராஜர் ஆனந்த நடனம் ஆடிக் காட்டியவர். இவரது சந்நிதியின் கீழ்ப்புறமாக சூரியன், சனீச்வரர், ஸ்வர்ண பைரவர், நவகிரகங்கள், ஹரதத்தரின் திருவுருவம் ஆகியன தரிசிக்கலாம். சிதம்பரத்தில் இவரது நடனத்தைக் காண இயலாத ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் ஆடிக் காட்டிய ஆனந்தக்கூத்தன். பிரகார வலச்சுற்றில் கன்னி விநாயகர், மஹா கணபதி, ஆதி அம்பாள், காசி விஸ்வநாதர், ரிஷிகள் வழிபட்ட லிங்கங்கள், மஹாலட்சுமி, வள்ளி - தெய்வானை உடனாய சுப்ரமண்யர் மற்றும் சுக்ரீவன் ஆகிய திருவுருவங்களைத் தரிசிக்கலாம். விஷ்ணு துர்க்கை மற்றும் சிவதுர்க்கை ஆகிய மூர்த்தங்களுக்கு மேற்கே புடைப்புச் சிற்பமாக காலபைரவரும், கங்கா விசர்ஜன மூர்த்தியும் காட்சி தருகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.