அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில் (திருக்கோடிக்காவல்)

God Name : திருக்கோடீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

அத்தனை புண்ணிய நதிகளும் கோடி தீர்த்தமாக வந்து, இவ்விறைவனை தரிசித்ததால் கோடிகா எனப் பெயர். கோபுர நுழைவாசலின் இரு மருங்கிலும், இவ்விறைவனை வழிபட வந்த நதிகள் - ரதங்களில் பவனி வருவது சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. காசிக்கு சமமாக கருதப்படும் இத்தலத்தில் மேற்கொள்ளப்படும் ஹோமம், ஜபம், தியானம் யாவும் - பன்மடங்காக பெருகும் என்பர். வைகானச சன்யாசிகள் 12,000 பேர் மூன்று கோடி மந்திரங்கள் ஜபித்து சாயுஜ்ய முக்தி வேண்டி நின்றனர். அவர்களுக்கு பிரத்யட்சமான சிவபெருமான் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். திருக்கோடீஸ்வரரை தரிசித்தால், மூன்று கோடி சிவஸ்தலங்களை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கிறது. வைணவராக தோன்றி சிவமே சித்தம் என்றிருந்த ஹரதத்தர் என்பவர் தனது தினசரி வழிபாட்டிலிருக்கும் ஆறு ஸ்தலங்களில், திருகோடிக்கா தரிசனம் முடித்துவிட்டு கஞ்சனூர் செல்ல ஆயத்தமானார். திடீரென பெய்த மழையால் போக முடியாமல் திண்டாடி நின்றவரை, பக்தன் ஒருவன் துணையாக இருந்து கஞ்சனூர் அழைத்துச் சென்று இறைவனை தரிசிக்க உதவினான். தனக்கு கிடைத்த சுண்டல் பிரசாதத்தை, தரிசனத்திற்கு உதவிய பக்தனுக்கு கொடுத்தார் ஹரதத்தர். மறு நாள் தினசரி வழிபாட்டு முறையாக திருகோடிகா சென்று கோடீஸ்வரரை தரிசித்தார். என்ன ஆச்சர்யம்.. முதல் நாள், இவர் தந்த சுண்டல் கோடீஸ்வரர் முன் படைக்கப்பட்டிருந்தது. இவருக்கு வழிகாட்டி உதவியவர் இவ்விறைவனே என உணர்ந்தார் ஹரதத்தர். பாஸ்கரராயர் என்ற சக்தி உபாசகர் லலிதா சஹஸ்ரநாம பாஷ்யத்தை அம்பாள் வடிவாம்பிகை சந்நிதியில் அரங்கேற்றினார். துர்வாசரும் அகஸ்தியரும் நீண்ட தவம் மேற்கொண்ட ஸ்தலம். தெற்கிலிருந்து வடக்காக உத்தரவாஹினியாக இங்கு ஓடும் காவிரி ஆற்றில், கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை வேளையில் நீராடினால் சகல பாவங்களும் தொலையும். மூன்று கோடி மந்திர தேவதைகளின் சாபம் நீங்கப் பெற்ற ஸ்தலம். துலாபார நேர்த்திக்கடன் செய்யப்படும் சிவாலயம். இவ்வூரில் மயான பூமி கிடையாது. இங்கு வசிப்பவர்களை காவிரியின் அக்கரை எடுத்துச் சென்று தகனம் செய்யும் வழக்கம் உள்ளது. பஞ்ச 'கா' க்ஷேத்திரங்களுள் ஒன்று. (திருக்கோலக்கா, திரு நெல்லிக்கா, திருவானைக்கா, திருகுரகுக்கா, திருகோடிக்கா) நந்தி தேவர் தனது கொம்புகளைக் கொண்டு உருவாக்கிய சிருங்க தீர்த்தம் - திருக்குளம் வடக்கே உள்ளது. சிருங்கோத்பவ தீர்த்தம் என்றும் கூறுவர். இதன் கரையில் ஸ்ரீ வித்யா விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். தேவாரத்திருத்தலம்.
மூலவர்: திருக்கோடீஸ்வரர், அம்பாள்: வடிவாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான திருக்கோடீஸ்வரர். கோடிகா ஈஸ்வரர் என்றும் அழைப்பர். சுயம்பு லிங்க மூர்த்தம். யமபயம் நீக்கும் நாதர் எனப் போற்றப்படுபவர். மூன்று கோடி தேவர்களும், மூன்று கோடி மந்திர தேவதைகளும் இவ்விறைவனை வழிபடுவதால் கோடீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார் போலும். ஆடி மாதம் 19ஆம் தேதி சுவாமிக்கு இடப்புறமாகவும், 20ஆம் தேதி மத்தியமாகவும், 21ஆம் தேதி வலப்புறமாகவும் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. சுவாமி சந்நிதியின் வெளி மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் யமதர்மராஜனும், சித்ரகுப்தனும் சிலையாக நிற்கின்றனர். கோஷ்ட மூர்த்தங்களுடன் ரிஷிகளின் திருவுருவங்கள் காணலாம். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் வடிவாம்பிகை கமல தளங்களோடு கூடிய கற்பீடத்தில் எழுந்தருளி அருள் புரிகின்றாள். பெயருக்கேற்ப வடிவான தோற்றம். ஸ்ரீசக்கர மேரு போன்ற ஆபரணங்களுடனும், பாச - அங்குச, அபய - வரதம் கொண்ட சதுர்புஜங்களுடனும் காட்சி தருகின்றாள். திரிபுரசுந்தரி என்றொரு பெயரும் உண்டு. அகஸ்தியரால் மணல் கொண்டு உருவாக்கப்பட்ட கரையேற்று விநாயகர் ஆசி வழங்குகிறார். காலப்போக்கில் திருவுருவம் சற்று கரைந்திருந்தாலும், அதன் தொன்மை தெரிகின்றது. வடக்கு பிரகாரத்தில் அனுக்ரஹம் புரியும் பாவத்துடன் தனி சந்நிதி கொண்டுள்ள பிரம்மா, மேற்கு பிரகாரத்தில் பால சனீஸ்வரர், உலோகத்தால் இல்லாமல் கற்சிலையாக காணப்படும் நடராஜர், அஷ்ட புஜ துர்க்கை போன்ற வித்தியாசமான அழகுடைய திருவுருவங்களைக் காணலாம். சனீஸ்வரர், அவரது மனைவி ஜேஷ்டா தேவி, மகன் மாந்தி, மகள் மாந்தா அனைவரும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு காட்சி தருகின்றனர். துர்வாசர், அகஸ்தியர் போன்ற மகரிஷிகள் சிலா வடிவங்களாகவும், விமானத்து சுதை சிற்பங்களாகவும் காணப்படுகின்றனர். சண்டீஸ்வரர், கஹர்ணேஸ்வரர், நாதேஸ்வரர், சண்டிமீட்டேஸ்வரர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.