அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில் (கஞ்சனூர்)

God Name : மூலவர்: அக்னீஸ்வரர்் உற்சவராக தம்பதி சமேதராக சுக்ர பகவான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

மலர்களின் தேன் ஒழுகப் பெற்று, பழச்சாறுடன் கலந்து, கழனிகளில் கரும்புச்சாற்றுடன் கலந்து ஓடியதால் கஞ்சாறு ்

எனப் பெயர் கொண்டு, பின்னர் மருவி கஞ்சனூர் என்றானது. போஜராஜனின் வம்சத்தில் வந்த கம்ஸன் என்ற அரசன் ்

தகாத நடத்தையினால், உடல் நலம் கெட்டு, சுக்ரனின் உபதேசப்படி இத்தலம் வந்து, இவ்விறைவனை வழிபட்டு உடல் ்

நலம் பெற்றான். இதனால் இவ்வு+ர் கம்ஸபுரம் எனப்  ்பெயருற்று பின்னர் கஞ்சனூர் ஆனதாகவும் கூறுவர். ்

பார்வதி - பரமேஸ்வரர் திருமணக் கோலம் காண வேண்டி, ப்ரம்மன் இத்தலத்தில் தவமிருந்து கல்யாணக் கோலம் ்

காணப் பெற்றார். ப்ரம்மனுக்கு கஞ்சன் என்றொரு பெயர் இருப்பதால் இவ்வு+ர் கஞ்சனூர் என அழைக்கப்படுகிறது என்பர்.

அக்னி பகவான் இத்தலத்து மூலவரை வழிபட்டு பு+ஜித்த காரணத்தால் ஸ்வாமிக்கு அக்னீஸ்வரர் எனப் பெயர் வந்தது. ்

அக்னி தேவனின் சோகையை நீக்கியவர் அக்னீஸ்வரர்.

அசுரர்களின் குருவான சுக்ரன் கடுந்தவம் புரிந்து, சிவபெருமானிடமிருந்து, இறந்தவர்களை பிழைக்க வைக்கும் ்

சஞ்சீவினி மந்திரத்தை கற்றார். தேவாசுர யுத்தத்தின்போது இறந்த அசுரர்களை எல்லாம் பிழைக்க வைத்துக் ்

கொண்டிருந்ததால், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். இதை தடுக்க சிவபெருமான் சுக்ரனை ்

விழுங்கி வயிற்றுக்குள் சிறைப்படுத்தி விட்டார். பின்னர் சுக்ரன் மீது கருணை கொண்ட பார்வதி தேவி, ்

சிவபெருமானிடம் சுக்ரனை விடுவிக்க கோரினார். பின்னர் சுக்ரன் கிரக பதவியையும் பெற்றான். இதனால் ்

இத்தலத்தில் அக்னீஸ்வரரையே சிவனாகவும் சுக்ரனாகவும் வழிபடுகின்றனர். நவகிரகங்களில் சுக்ரனுக்குரிய ்

ஸ்தலம். அன்னை பார்வதியை வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவோர்களை சுக்ரன் சந்தோஷமாக ஆசி ்

வழங்குகின்றான்.

இவ்வு+ரைச் சேர்ந்த ஹரதத்தர் எனும் வைணவர் விபு+தி பு+சி, ருத்ராட்சமணிந்து அக்னீசர் கோவிலிலுள்ள ்

தட்சிணாமூர்த்தி சிலையின் கீழ் நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். சிவனே பரம்பொருள் என்று இருப்பவர். ்

இறைவனின் தரிசனம் கண்டவர்.

ஒரு சமயம், வயசான விவசாயி ஒருவன், சுமந்து வந்த புல்கட்டின் பளு தாங்காமல், ஒரு வீட்டின் மதிற்சுவர் ்

மீது வைத்தான். புல் கட்டு உள்பக்கமாக விழுந்து, அங்கிருந்த கன்றுகுட்டி துரதிருஷ்ட வசமாக இறந்து ்

விட்டது. ஊர் மக்கள் ஒன்று கூடி விவசாயியை தண்டிக்கின்றனர்.  ்அப்போது அங்கு வந்த ஹரதத்தர், ்

விவசாயி பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறிக் கொண்டே இருப்பதால் அவனது பாவம் தொலைந்தது என்றார்.

அப்படியானால் கோவிலிலுள்ள கல்நந்தியை புல் சாப்பிட வைக்கட்டும் என்ற மக்கள் கேலி செய்தனர். ்

ஹரதத்தர் இறைவனை வேண்டிக் கொண்டிருக்க, விவசாயி பஞ்சாட்சர மந்திரம் கூறிக் கொண்டே, ்

புல் கட்டை கல் நந்திக்கு கொடுக்க, கல் நந்தியும் புல் தின்ற அதிசயம் நிகழ்ந்த ஸ்தலம்.

சிவபக்தன் ஒருவன் தன் வீட்டில் காய்த்த சுரைக்காயை இறைவனுக்காக விட்டு வைத்திருந்தான். ்

ஒரு நாள் சிவனடியார் ஒருவர் அவனது வீட்டிற்கு வந்து தனக்கு பசிக்கிறது எனக் கேட்டார். பக்தனின் ்

மனைவி சுரைக்காயை பறித்து சமைத்து போட்டு விட்டாள். இறைவனுக்காக வைத்திருந்ததை எடுத்து ்

விட்டாளே என மனைவி மீது கோபமாயிருந்தான் பக்தன். அவனது கனவில் தோன்றிய இறைவன் ்

அடியாராக வந்து சுரைக்காயை உண்டது தாமே என கூறினார். இந்த நிகழ்ச்சியை நினைவு+ட்டும் ்

வகையில், அக்னீசருக்கு அன்னாபிஷேகம் செய்யும்போது சுரைக்காயும் இடம் பெறுகிறது.

மானக்கஞ்சாற நாயனார் அவதரித்த ஸ்தலம். கலிக்காமரின் திருமணம் நடந்த ஸ்தலம். ்

பராசரரின் சித்தப்ரம்மை நோயை நீக்கியருளிய ஸ்தலம்.

தேவரா வைப்புத்தலம் -  ்நவகிரக ஸ்தலங்களுள் ஒன்று - சுக்கிரன் ஸ்தலம்

மூலவர்: அக்னீஸ்வரர், அம்பாள்: கற்பகாம்பிகை

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அக்னீஸ்வரர். அக்னி ஜோதியாக பிரகாசிக்கும் ்

சுயம்பு மூர்த்தம். உயரமான பாணத்துடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார்.

அக்னீஸ்வரர் சந்நிதிக்கு தென்புறம் எழுந்தருளியுள்ள உமாதேவி உடனாய சிவபெருமான் சுக்ர கிரக வழிபாட்டுக்கு

உரியவர். ஐம்பொன்னால் உருவான அழகிய திருமேனி. இவரை பு+ஜிப்பவர்கள், சுக்கிர கிரகத்தினால் ஏற்படும் ்

தோஷங்களிலிருந்து விடுபட்டு நலன் பெறுவர்.

பஞ்சலோகத்திலான உத்ஸவராக தம்பதி சமேதராக சுக்ர பகவான் எழுந்தருளியுள்ளார்.

ஸ்வாமிக்கு வலப்பக்கமுள்ள சந்நிதியில் அம்பாள் கற்பகாம்பிகை எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.

சிவகாம சுந்தரி உடனாய நடராஜப் பெருமான் செப்பு சிலைகளாக இல்லாமல் கற்சிலைகளாக காணப்படுகின்றனர். ்

சிலையின் கீழ் சனகாதியர்களுக்கு பதிலாக, கை கூப்பி வணங்கிய நிலையில் ஹரதத்தரின் திருவுருவம் ்

காணப்படுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.