அருள்மிகு சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோயில் (திருலோக்கி)
God Name : சுந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
முதலாம் ராஜராஜ சோழனின் மனைவியான த்ரைலோக்கிய மாதேவியின் பெயரில் நிர்மாணிக்கப்பட்ட ஊர் என்பதால் த்ரைலோக்கிய மாதேவி சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டு தற்போது மருவி திருலோக்கி என்றானது.
பாப விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்த குரு பகவான், த்ரைலோக்ய சுந்தரேஸ்வரருக்கு, பசு நெய்யால் விளக்கேற்றி, கொன்றை மாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சித்து, தயிரன்னம் நைவேத்யம் செய்து வழிபட்டார். இத்தலத்தில் தவம் மேற்கொண்ட குரு பகவானுக்கு, மார்கழி திருவாதிரை நாளன்று, சுந்தரேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை ஆலிங்கனம் செய்தவாறு, ரிஷபாரூடராய் காட்சி தந்து, குருவிற்கு பாப விமோசனம் நல்கினார் என ஸ்தல வரலாறு.
சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி, நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனுக்கு உயிர்பிச்சை தருமாறு வேண்டி நின்ற ரதி தேவி, த்ரைலோக்கிய சுந்தரரை வழிபட்டு மீண்டும் கணவனைப் பெற்றாள் என ஸ்தல வரலாறு. (எரித்தது - கொற்கையில், உயிர் பெற்றது திருலோக்கியில்)
5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் எனவும் ராஜேந்திர சோழன் திருப்பணிகள் செய்துள்ளான் எனவும் குறிப்பொன்று கூறுகிறது.
தேவார வைப்புத்தலம்
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சுந்தரேஸ்வரர். த்ரைலோக்ய சுந்தரம் எனப் போற்றப்படுபவர். அழகு மிளிரும் சிறிய லிங்க மூர்த்தம். மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.
மஹா மண்டபத்தில் வடக்கு திசை நோக்கி தரிசனம் தரும் ரிஷபாரூடரான ஆலிங்கன சந்திரசேகரரின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பின்னிரு கரங்களில் சூலமும், மானும் ஏந்தியுள்ளார். முன் வலது கரம் அபய முத்திரை கொண்டும், இடது கரம் அம்பிகையை அணைத்தபடியும் - அணைத்தெழுந்த நாயகனாக காட்சி தருகின்றார். அம்பிகை தனது வலது கரத்தால் (சிவனை) அணைத்தபடி, மேனியை சாய்த்து ஒயிலாக நிற்கும் எழில் கோலத்தில் காட்சியளிக்கிறாள். சிவம் தழுவிய சக்தியா? சக்தி தழுவிய சிவமா? என்ற கேள்விக்கு விடை காண முடியாத திருமேனி. ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அருகே கூப்பிய கரங்களுடன் ப்ரஹஸ்பதி எனப்படும் குரு பகவான் ரிஷபாரூடரை வழிபடும் நிலையில் தரிசனம் தருகின்றார். ருத்ராட்ச மாலையும் கமண்டலமும் கொண்டுள்ளார். மற்ற ஸ்தலங்களில் ஆசி வழங்கும் நிலையில் காணப்படும் குரு பகவான் இங்கு ரிஷபாரூடரை வழிபடும் நிலையில் உள்ளதால் கூப்பிய கரங்களுடன் காணப்படுகிறார்.
எதிரில் தெற்கு பார்த்தபடி ரதி - மன்மதனின் ஆலிங்கன வடிவம். திருவாட்சியுடன் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ள அழகான திருவுருவம். மாப்பிள்ளை தோழனும், பெண்ணின் தோழியும் இரண்டு பக்கங்களிலும் இடம் பெற்றுள்ளனர்.
மூலஸ்தானத்தின் வலப்பக்கமாக தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் புரியும் அகிலாண்டேஸ்வரி சௌந்தர்ய வடிவினள். மிகுந்த வரபிரசாதி.
பிரகார வலச் சுற்றில் அனேக மூர்த்தங்களை தரிசிக்கலாம். அவற்றுள் நேர்த்தியான சிற்பமாக கஜலட்சுமியை சொல்லலாம். இருபுறமும் இரண்டு யானைகள் துதிப்பது போலுள்ள கஜலட்சுமியின் சிற்பம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாம். மகிஷத்தின் மீது வீற்றிருக்கும் துர்க்கை சிலையும் அழகானது. மூன்று பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.