அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மர் திருக்கோவில் (நரசிங்கம்பேட்டை)
God Name : மூலவர்: ஸ்ரீ யோக நரசிம்மர்் உற்சவர்: ஸ்ரீ பிரஹலாத வரதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ஸ்ரீயப்பதியாகிய பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யவதம் செய்த பின்னர், ஹத்தி தோஷம் நீங்க, சுயம்புநாத ஸ்வாமியான சிவபெருமானை வழிபட்டு, பின் யோக நிலையில் அமர்ந்த ஸ்தலமிது. திருவுருவம் உக்கிரமாக இருந்தாலும், அனுக்ரஹ மூர்த்தியாகவே காணப்படுகிறார். பக்த வாத்ஸல்யனாக இருப்பதால் சேவார்த்திகள் கூட்டமும் அதிகம். ஏவல், பில்லி சூன்யம் போன்ற கொடிய செயல்களிலிருந்து ரட்சிப்பவர். சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்து, பானகம் நைவேத்தியம் செய்கின்றனர். இங்கு நேர்ந்து கொண்டு மட்டைத் தேங்காய்களை கட்டித் தொங்க விடுகின்றனர். சந்நிதியில் மந்திர ராஜபத ஸ்தோத்திரம் படிக்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ யோக நரசிம்மர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரம் கைகளில் ஏந்தி, யோக முத்திரைகளை கரங்களில் இருத்தி, சதுர்புஜதாரியாக காட்சி தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்ரீ தேவி - பூதேவி சகிதம் ஸ்ரீ பிரஹலாத வரதர் உற்சவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.