ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானம் (கோவிந்தபுரம்)
God Name : -
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
ஸ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதியாக இருந்தவர் (1638 - 1692). காஞ்சிபுரத்தில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் வசித்து வந்த கேசவ பாண்டுரங்கர் - சுகுணா தம்பதியினருக்கு 1638 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு புருஷோத்தமன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். அப்போது 58வது பீடாதிபதியாக இருந்த ஆத்ம போதேந்திரர் என்ற விஸ்வாதிகேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்தவர் கேசவ பாண்டுரங்கர். தந்தையுடன் அடிக்கடி ஸ்ரீமடத்திற்கு வந்த பாலகனான புருஷோத்தமனின் பக்தி, சாதுர்யம் இவற்றை கவனித்த ஸ்வாமிகள், புருஷோத்தமனை ஸ்ரீமடத்திற்கு எடுத்துக் கொண்டார். ஏழு வயதில் உபநயனம். 16 வயது முடிவதற்குள் வேதம், சாஸ்திரம், வேதாந்தம் அனைத்தையும் கற்றுணர்ந்தார் புருஷோத்தமன். பின்னர் 59வது பீடாதிபதியாக பட்டம் சூட்டி ஸ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்ற பெயரையும் சூட்டினார் பெரிய ஸ்வாமிகள். பகவானின் கருணையை எளிதில் பெற நாம சங்கீர்த்தனமே உயர்ந்த வழி என பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாளுடன் சேர்ந்துகொண்டு பல ஊர்களுக்கு சென்று நாம சங்கீர்த்தனங்கள் செய்தார். பெருமளவு மக்கள் கலந்து கொண்டு சந்தோஷப்பட்டனர். நாம சங்கீர்த்தனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் தனது மடாதிபதி பதவியையும் துறந்தார். ஸ்ரீதர ஐயாவாள் மஹாலிங்கஸ்வாமி கருவறையில் ஐக்யமானதிலிருந்து, (போதேந்திர ஸ்வாமிகள்) மௌனமாகி, கோவிந்தபுரத்திலேயே தங்கி, நாமஜெபம் செய்து கொண்டிருந்தார். கோடை காலத்தில், காவிரி ஆறு நீரற்று மணல் படுகையாக இருக்கும். அதில் சிறுவர்கள் விளையாடி சந்தோஷப்படுவார்கள். அவர்களுக்கு இணையாக ஸ்வாமிகளும் விளையாடுவார். ஒரு நாள் மணல் நிறைந்த பகுதி ஒன்றில் குழி தோண்டி, இறங்கி நின்று கொண்டார் ஸ்வாமி. மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களுக்கு உத்தரவிட்டார். இதுவும் ஒரு விளையாட்டு எனக் கருதிய சிறுவர்கள் அவ்வாறே செய்தனர். மறு நாள் குருவைக் காணாது சிஷ்யர்கள் கவலையுற்று இருக்க, சிறுவர்கள் மூலம் விஷயமறிந்து தேட ஆரம்பித்தனர். மணலைத் தோண்டி தேடுபவர்களிடம் தான் ஜீவசமாதியான விஷயத்தை அசரீரியாகக் கூறி தன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாமென கேட்டுக் கொண்டார். இப்போதும் அதிகாலை வேளையில் அவர் நடக்கும் பாதகுறடு சத்தமும், ராமநாம ஒலியும் கேட்பதாக சொல்கின்றனர். 1692 ஆம் வருடம் (பிரஜோத்பத்தி) புரட்டாசி மாதம் பௌர்ணமி திதியில் ஸ்வாமிகள் ஆற்றுக்குள் இறங்கி மணலுக்குள் ஐக்யமாகி ஜீவ சமாதியானார். ஸ்வாமிகள் வழங்கிய நூல்கள்: ராமாமிர்த ரஸோதயம், ராம ரசாயனா, ராம சூர்யோதயா, நாம தரங்கா, நாம அர்ணவா, ஹரிஹர போதாதிகாரா, ஹரிஹர அத்வைத புஷணா, மூர்த்த பிரம்மா விவேகா ஆகிய நூல்கள்.
அதிஷ்டானத்தின் பிரதான வாசல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது. உயரமான தூண்கள் கொண்ட மண்டபத்து நடுவே ஸ்ரீ போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம், பிரதக்ஷிணம் செய்யும் வகையில் அமையப் பெற்றுள்ளது. ஸ்வாமிகள் ஜீவ சமாதியான இடத்தில் பிருந்தாவனமும் துளசிச் செடிகளும் அமைத்து வழிபடுகின்றனர். அதிஷ்டானத்திற்குள்ளிருந்து ராமநாமம் ஜெபிக்கும் ஒலி சில சமயங்களில் கேட்பதுண்டு. மண்டபத்து தூண்களருகே அழகிய பிள்ளையார், முருகன் மற்றும் துளசிமாடம் ஆகியன தரிசிக்கலாம். ஸ்ரீ ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். அபய ஹஸ்தமும், கதையும் கொண்ட அழகிய திருமேனி. 40 பசுக்கள் கொண்ட கோசாலை ஒன்றும் உள்ளது. சர்வலோக சரண்யாய போதேந்த்ர குருமூர்த்தயே - ஸ்ரீதரார்ய ஸ்வரூபாய நாமோத்வாராய மங்களம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.