ஸ்ரீ விட்டல் - ருக்மணி சமஸ்தான் - ஸ்ரீ பாண்டுரங்க பஜனாஸ்ரமம் (கோவிந்தபுரம்)
God Name : ஸ்ரீ பாண்டுரங்கன்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் ஜெயகிருஷ்ண தீட்சிதர், ஸ்ரீ விட்டல்தாஸ் என்று அழைக்கப்படுபவர், 1998 ஆம் ஆண்டு இங்கு பஜனாஸ்ரமத்தை நிறுவினார். இவர் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதரின் பேரனும், உபன்யாசகரான ராம தீட்சிதரின் மகனும் ஆவார். ஞானாநந்தகிரி பீடாதிபதி ஹரிதாஸ்கிரி ஸ்வாமி அவர்களின் சிஷ்யன் இவர். பின்னர் படிப்படியாக உருவாக்கிய ஸ்ரீ விட்டல் - ரகுமாயி கோவிலை, 15.07.2011 அன்று கும்பாபிஷேகம் செய்து நிறைவு செய்தார்.
ஹேமாண்ட பந்தி எனப்படும் மகாராஷ்டிர பாணியில், பண்டரிபுரத்தில் உள்ளது போலவே, மிகப் பெரிய கோவிலை நிர்மாணித்துள்ளனர். 132 அடி உயரம் கொண்ட கோபுரம், அதில் 18 அடி உயர கலசம். மகாதுவாரம் எனப்படும் பிரதான வாசல் 80 அடி உயரமும் 62 அடி அகலமும் கொண்டு மகாராஷ்டிர கட்டடக் கலையை பின்பற்றியுள்ளனர்.
ஸ்ரீ ரகுமாயி சமேத பாண்டுரங்கனின் அழகிய திருவுருவங்களை சேவிக்கலாம். சர்வாலங்காரத்துடன் மிகப் பெரிய திருமேனிகளுடன் காட்சி தருகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் ஸ்ரீ விட்டல் - ருக்மாயி பாதங்களைத் தொட்டு வணங்கலாம். உற்சவ மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. 16 வித கிருஷ்ண லீலைகளை பெரிய பெரிய சிற்பங்களாக வடித்துள்ளனர்.
ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவனத்தில் உள்ளது போல, 150 பசுக்களைக் கொண்ட கோசாலை ஒன்றும் இங்கு பராமரிக்கப்படுகிறது. குஜராத்தில் இருந்து கிர் இனப் பசுக்களை வரவழைத்துள்ளனர். நீண்ட காதுகள், செந்நிறம், பிரம்மாண்டமான உடல் அமைப்பு கொண்ட அழகிய பசுக்கள் இவை. பசுக்களின் பாலை கறப்பதில்லை் கன்று குட்டிகள் குடிக்க விட்டு விடுகின்றனர்.
2000 பேர் அமரும் வசதி கொண்ட வசந்த மண்டபத்தில், ஸ்ரீ பாகவத சம்மேளனம், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், கீத கோவிந்த சப்தாஹம், நாம சங்கீர்த்தனம், கோகுலாஷ்டமி ஆகியன சிறப்புற நடைபெறுகின்றன. காலை - மாலை வேளைகளில் வேத அப்யாசம் நடக்கும் வேத பாடசாலை ஒன்றும் வளாகத்துள் அமைந்துள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.