அருள்மிகு சிவயோகிநாதர் திருக்கோவில் (திருவிசநல்லூர்)
God Name : ஸ்ரீ சிவயோகிநாத ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
விஷ்ணுசர்மா என்பவருக்கு புத்திரனாகப் பிறந்த பிரம்மன் - சிவயோகி எனும் பெயர் கொண்டு, தம்முடன் பிறந்த எழுவருடன், இங்கு நீண்ட காலம் தவமிருந்தார். ஒரு சிவராத்திரி தினத்தன்று, தானும் தன்னுடன் பிறந்த எழுவருடனும் சிவலிங்க மூர்த்திக்குள் புகுந்து ஐக்கியமானார். இதன் அடையாளமாக சிவலிங்கத்தின் திருமுடியில் எண்மரின் சடைகளைக் காணலாம்.
யமனை உள்ளே வராமல் தடுக்க நந்தியம்பெருமான் வாசலைப் பார்த்தபடி இருப்பதாக ஐதீகம். ஆகவே யமபயம் நீக்கும் ஸ்தலமாக இது கருதப்படுகிறது. சிவயோகிநாதரை வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி மனிதனின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள். சனியின் ஆதிக்கத்தையொட்டி, 30 ஆண்டுகளாகப் பகுத்து, 30 ஆண்டுகளுக்கு ஒரு பைரவர் வீதம், நான்கு பைரவர்கள் காட்சி தருகின்றனர். இவர்களே சதுர்கால பைரவர்கள்.
அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோத பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களும், அஷ்டமி திதியன்று சதுர் ஷஷ்டி (8 x 8) பைரவ சக்திகளாக மாறி நம்மைக் காப்பதாக ஐதீகம்.
வன்னி, புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, புரசு, வில்வம் ஆகிய எட்டு விருட்சங்கள். இதில் நெல்லி மரம் விஷ்ணு பகவானால் நடப்பட்டது.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: ஸ்ரீ சிவயோகிநாத ஸ்வாமி, அம்பாள்: ஸ்ரீ சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சிவயோகிநாத ஸ்வாமி. இவருக்கு வில்வவனேசர், புராணேஸ்வரர், யோகநந்தேஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு. சுயம்புலிங்கம். ஒளி வீசும் அழகிய திருமேனி. பெரிய ஆவுடையார் கொண்டுள்ளார். திருமுடியில் சடைகள் காணப்படுகின்றன. கிழக்கு பார்த்த சந்நிதி. சித்திரை 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் ஸ்ரீ சௌந்தர நாயகி பெயருக்கேற்றார் போல சௌந்தர்ய தோற்றம் கொண்டு தரிசனம் தருகின்றாள்.
ஒரு காலை எடுத்து வைத்து எழுந்திருக்கும் பாவனையிலும், வாசலைப் பார்த்த வண்ணமுமாக காட்சி தரும் நந்தியம்பெருமான் வித்தியாசமான அழகு. நந்தி முன்னேயும் கொடிமரம் பின்னேயுமாக இருப்பது ரிஷபத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
ஞான பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர், உன்மத்த பைரவர், யோக பைரவர் ஆகிய சதுர்கால பைரவர்கள், கார்யசித்தி நல்கும் வரப்பிரசாதிகளாக எழுந்தருளியுள்ளனர்.
சுக்லபட்சம் அல்லது வளர்பிறை அஷ்டமி தினங்களில் வழிபடுவோர்க்கு தொழிலில் முன்னேற்றமும், கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் வழிபடுவோர்க்கு குடும்ப அமைதி கிடைக்கும் மற்றும் நோய்களிலிருந்து விடுபடுவர். ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையான 4.30 - 6.00 மணியளவில், மிளகை துணியில் முடிச்சுப்போட்டு திரியாக பயன்படுத்தி தீபம் ஏற்றி வழிபடுபவர்கள், இழந்த சொத்தை மீண்டும் அடைவர்.
கோவிலின் உயரமான மதிற்சுவரில் அரைவட்ட வடிவத்தில் சூரிய கடிகாரம் இருக்கின்றது. எட்டு தீர்த்தங்கள், எட்டு ஸ்தல விருட்சங்கள் கொண்ட ஸ்தலம். ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கோவில் என்பார்கள் (1012-1044).
ரிஷப ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.