அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோவில் (பாகவதபுரம்)
God Name : மூலவர்: வாசுதேவர், உற்சவர்: ராஜகோபாலர், சிறப்பு மூர்த்தம்: விருத்த ஆஞ்சநேயர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
மருதாநல்லூர் ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள், எண்ணற்ற பாகவதர்கள் பின்தொடர, செல்லுமிடமெல்லாம் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தார். இவர்களுக்கு நாம சங்கீர்த்தனம் செய்ய நிரந்தரமாக ஒரு இடம் தரவேண்டுமென ஆசைப்பட்ட தஞ்சை மகாராஜா, திருவிசநல்லூரை அடுத்துள்ள இவ்வூரை பாகவதர்கள் பெயருக்கே சாஸனம் செய்து வைத்தார். இதனால் இவ்வூர் பாகவதபுரம் எனப்படுகிறது.
மூலவர்: வாசுதேவர், உற்சவர்: ராஜகோபாலர், சிறப்பு மூர்த்தம்: விருத்த ஆஞ்சநேயர்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். சுதை வடிவம்.
ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி எழுந்தருளி சேவை சாதிக்கிறார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர்.
மஹா மண்டபத்தில் தும்பிக்கை ஆழ்வார், காளிங்க நர்த்தனர், நாகராஜன், ஸ்ரீ ராமர், ராமாநுஜர், நம்மாழ்வார் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாக கோவில் கொண்டுள்ள விருத்த ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.