அருள்மிகு வஜ்ரஸ்தம்பேஸ்வரர் திருக் கோவில் (கீழக்காட்டூர்)

God Name : வஜ்ரஸ்தம்பேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

உமையன்னை - பசுபதீஸ்வரர் திருமணத்தைக் காண, பந்தணைநல்லூர் வந்த தேவேந்திரன், தான் தினமும் பூஜிக்கும் ஆன்மார்த்த மூர்த்தியை எடுத்து வர மறந்து விட்டான். இங்குள்ள மண்ணியாற்றில் நீராடி அருகிலுள்ள கருப்பஞ்சோலைக்குள் சென்று, தனது வஜ்ராயுதத்தை நட்டு, அதில் ஸ்வாமியை ஆவாஹனம் செய்து வழிபட்டான். அதிலிருந்து வெளிப்பட்டவரே வஜ்ரஸ்தம்பேஸ்வரர். கரும்பு ஒன்று முறிந்து அதிலிருந்து வெளிவந்த கருப்பஞ்சாற்றிலிருந்து தோன்றிய உமா தேவியை இக்சர நாயகி என்று அழைக்கின்றனர். தமிழில் கரும்பாயி என்பார்கள்.
மூலவர்: வஜ்ரஸ்தம்பேஸ்வரர், அம்பாள்: இக்சர நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வஜ்ரஸ்தம்பேஸ்வரர். அம்பாள் இக்சர நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அழகான கோஷ்ட மூர்த்தங்கள். பிரகார வலச்சுற்றில் பிள்ளையார், முருகன், கஜலட்சுமி, நவகிரகங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.