அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் (பந்தணைநல்லூர்)
God Name : பசுபதீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
இமயமலைச்சாரலில் பார்வதி தேவி தோழியர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். பந்தைப் பிடிக்க முற்பட்டபோது, தன்னைத்தான் நிற்கச் சொல்கிறாள் அன்னை என நினைத்த சூரியன் அஸ்தமிக்காது இருந்ததால் கால நிலை மாறியது.
இதனால் கோபமுற்ற சிவபெருமான் பந்தைப் பிடுங்கி வீசி எறிந்தார். பூலோகத்தில் சரக்கொன்றை மரத்தடியில் பந்து வந்து விழுந்தது. பந்து அணைந்த தலம் என்பதால் பந்தணைநல்லூர் எனப் பெயர் கொண்டது. தற்போது பந்தநல்லூர் எனப்படுகிறது. விளையாட்டாக இருந்தாலும் இயற்கை நிலை மாறக் காரணமாயிருந்ததால் அம்பாளைப் பசுவாக மாறும்படி சபித்து விட்டார் சிவபெருமான்.
பந்து விழுந்த இடத்தில் கண்வ முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. இங்கிருக்கும் கொன்றை வனத்தில் புற்றாக இருந்த லிங்க வடிவத்தை வழிபட்டு வந்தார் கண்வ முனிவர்.
பார்வதி பசுவாக மாறி பூலோகம் போவதைக் கண்ட விஷ்ணு, தன் சகோதரிக்குத் துணையாக இடையனாக வந்து பசுவுக்குப் பாதுகாப்பாக இருந்தார். பசுக்கூட்டங்களை மேய்த்துக் கொண்டு இடையனான கோபாலன் இத்தலத்திற்கு வந்தார். புற்று வடிவிலிருந்த சிவலிங்கத்திற்கு, பசுவாக இருந்த அம்பாள் பாலைப் பொழிந்து அபிஷேகம் செய்தாள்.
பசுவை விரட்டியதில், பசு நகரும்போது, அதன் காலடிக் குளம்பு லிங்கத்தின் சிரசில் பட்டது.
உடனே பசு சுயவுருவம் பெற்றது. பசுவை மேய்க்க இடையனாக வந்தவன் கோபாலனாக மாறினான். சுய உருவம் பெற்ற பசு, அம்பாளாக மாறியதும் சிவபெருமான் கல்யாணசுந்தரராகக் காட்சி தந்தார். தேவியை மன்னித்து மணந்து கொண்டார் என ஸ்தல வரலாறு. பசுவிற்குப் பதியானதால் பசுபதீஸ்வரர் என்றானார்.
தேவாரத்திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்ரங்களுள் ஒன்று.
மூலவர்: பசுபதீஸ்வரர்் அம்பாள்: வேயுறுதோளியம்மை.
மூலஸ்தானத்தில் பசுபதீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். குட்டையான திருமேனி, புற்று வடிவம் கொண்ட தோற்றம். புற்று மண்ணால் உருவான பாணம். புற்றுமண் பாணத்தைச் சுற்றிலும் கல்லிலான ஆவுடை அமைக்கப்பட்டுள்ளது. மணல் லிங்கம் என்பதனால் குவளை சாற்றி அபிஷேகம் செய்கின்றனர்.
பசு வடிவிலிருந்த அம்பிகை, லிங்கத்தின் மீது பாலைப் பொழிந்ததால் இந்த மணல் லிங்கம் வெண்மையாகக் காட்சி தருகின்றது. லிங்கத்தின் சிரசில் பசுவின் காலடிக் குளம்பின் சுவடுகள் தெரிகின்றன.
ஆவணி மாதம் 19, 20, 21 தேதிகளில் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் வேயுறுதோளியம்மை அழகே உருவாக எழுந்தருளியுள்ளார். வேணுபுஜாம்பிகை, காம்பன தோளியம்மை ஆகிய திருநாமங்களும் உண்டு.
நுழைவாசலில் கோட்டை முனி ஆண்டவரை தரிசிக்கலாம். ஸ்தல விநாயகரான ந்ருதி கணபதியிடம் ஆசி பெற்று வலச்சுற்றை ஆரம்பிக்கலாம். அழகிய கோஷ்ட மூர்த்தங்களையும், பிரகார வலச்சுற்றில் பரிவார தேவதைகளையும் தரிசிக்கலாம். ஆதி கேசவப் பெருமாளையும் சேவிக்கலாம்.
கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.