அருள்மிகு செந்நெறியப்பர் திருக்கோயில் (திருச்சேறை)

God Name : மூலவர்: செந்நெறியப்பர்் சிறப்பு மூர்த்தம்: ருண விமோசன லிங்கம்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

இத்தலத்திற்கு வந்த மார்க்கண்டேயர் தன்னுடைய பிறவிக்கடன் நீங்குவதற்காக சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். அந்த லிங்க வடிவமே ருண விமோசனர். 'ருணம்' என்றால் கடன் எனப் பொருள். பிறப்பிலிருந்து இறப்பு வரை நாம் எதிர்கொள்ளும் பலவித கடன்களை தீர்த்து வைக்கும் ருண விமோசனர், தேவகடன், ரிஷி கடன், பித்ரு கடன், லௌகீக கடன் ஆகியவற்றையும் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. பிறவித் துன்பத்தை நீக்கி முக்தியை வழங்கும் இறைவன் என்பதால் செந்நெறியப்பர் என்ற திருநாமம் கொண்டார். தௌமிய மகரிஷி இவரை வழிபட்டு முக்தி அடைந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. சிவபெருமானை அழையாது, தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட குற்றம் நீங்க சூரியன் இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான். நான்கு மாதங்கள் வெறும் இலைகள், நான்கு மாதங்கள் பூக்கள், நான்கு மாதங்கள் ஒன்றுமில்லாத வெற்று மரம் - என வித்தியாசங்களைக் கொண்டுள்ள அதிசய மரமான மாவிலங்கை ஸ்தல விருட்சமாக உள்ளது. இதனைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்கின்றனர். மார்க்கண்டேய தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளத்தில் ஒரு துளி அமிர்தம் சிந்தியதாக ஸ்தல வரலாறு. இதனால் 'பிந்து சுதா' என அழைக்கின்றனர். இதை ப்ரோட்சணம் செய்து கொள்வதால் சகல பாபங்களும் நீங்கும். இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: செந்நெறியப்பர்் சிறப்பு மூர்த்தம்: ருண விமோசன லிங்கம்் அம்பாள்: ஞானவல்லியம்மை. மூலஸ்தானத்தில் செந்நெறியப்பர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். நீண்ட பாணமுடனும் வட்ட வடிவ ஆவுடையாருடனும் கூடிய அழகான திருமேனி. ஒளி வீசும் தேஜோ மய லிங்கம். இவருக்கு சார பரமேச்வரர் என்றொரு திருநாமமும் உண்டு. மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. பிரகார வலச்சுற்றில், மூலவர்க்கு நேர் பின்புறமாக உள்ள சந்நிதியில் ஸ்ரீ ருணவிமோசனர் லிங்க வடிவமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். சிறப்பு மூர்த்தமான இவரை 'கடன் நிவர்த்தீஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர். 11 திங்கட்கிழமைகளில் அர்ச்சனைகள் செய்து, கடைசி திங்களன்று அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம். ஸ்தல விநாயகர், அபிராமி உடனாய அமிர்தகடேஸ்வரர், முருகப் பெருமான், கஜலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டா தேவி, ஸ்ரீ நடராஜர், சனீஸ்வரர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். அஷ்ட புஜங்களுடனும், நாய் வாகனத்துடனும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பைரவர் வரப்பிரசாதி. சனி தோஷம் நீங்கவும், வழக்கு விவகாரங்களிலிருந்து விடுபடவும் இவருக்கு அஷ்டமி தினங்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து பிரார்த்தனை செய்கின்றனர். தேவாரப் பாடல் பெற்ற பைரவர் இவர். சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று தேவிகள் வடக்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். கிழக்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஞானவல்லியம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. நின்ற திருக்கோலம். மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் அம்பாள் பாதங்களில் படர்ந்து பாதபூஜை செய்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.