அருள்மிகு பலாசவனேச்வரர் திருக்கோவில் (திருநாலூர்)
God Name : பலாசவனநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
கஜப்பிருஷ்ட விமான அமைப்பைக் கொண்ட மாடக்கோவில். பலாசவனம் என்றால் புரசுமரக் காடு எனப் பொருள்.
இத்தலத்து இறைவனை ஆபஸ்தம்ப மகரிஷி வழிபட்டுள்ளார். சிவபெருமான் அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்திரம்
கொடுத்தருளிய புராணத்துடன் சம்பந்தப்பட்ட கோவில்.
முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவனும், வேத சாஸ்திரங்களில் விற்பன்னனுமான புகழ் பெற்ற பிரமாதிராஜன்
என்ற ஞானமூர்த்தி பிறந்த ஊர்.
ஆதியில் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட ஊரை, தமிழில் நால்வேதியூர் என அழைத்தார்களாம். பின்னர்
நாளடைவில் மருவி நாலூர் என்றானதாம்.
தேவாரத் திருத்தலம் - மாடக்கோவில்
மூலவர்: பலாசவனநாதர்் அம்பாள்: பெரியநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பலாசவனநாதர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு லிங்கம். லிங்கத் திருமேனியின்
மேற்பகுதி பலாப்பழம் போன்று முள்ளு முள்ளாக (ரேகை) காணப்படுகின்றது. கிழக்கு நோக்கிய சந்நிதி. தெற்கு நோக்கிய
சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.