அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோவில் - நாச்சியர்கோவில்

God Name : மூலவர்: நறையூர் நம்பி, உற்சவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள், சிறப்பு மூர்த்தம்: கல்கருடன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

நீர் வளம், நில வளம், ஊர் வளம் இம்மூன்றிலும் சிறந்த இவ்வூர் நறுமணம் மிகுந்த பூக்களைக் கொண்ட சோலைகளை உடையது. பூக்களிலிருந்து நறை அதாவது தேன் சொரிவதால் நறையூர் எனப் பெயர் கொண்டது. வஞ்சுள மரங்கள் (நீர்நொச்சி) மிகுந்த வகுளாரண்யத்தில் உள்ள நந்தவனத்தில் பர்ணசாலை அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. திருமாலிடம் பிணக்கு கொண்ட திருமகள், பூலோகம் வந்து இந்த நந்தவனத்திற்கு வந்து சேர்ந்தாள். கன்னிப் பெண்ணாக நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்த திருமகளைப் பார்த்த மேதாவி மகரிஷி, அவளது பூர்வீகத்தை விசாரித்தார். தான் ஒரு அநாதை என்றும் தன்னை மகளாக ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினாள் அந்தப் பெண். அவளை மகளாக ஏற்று வளர்த்து வந்தார் மகரிஷி. வஞ்சுளாரண்யத்தில் கிடைத்ததால் வஞ்சுளவல்லி எனப் பெயரிட்டிருந்தார் மகரிஷி. எனினும் அவளை நாச்சியார் என்றே கூப்பிட்டு வந்தார். இப்பெண்ணை திருமாலுக்கே மணம் முடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மகரிஷி, அதை நிறைவேற்ற வேண்டி திருமாலை நோக்கி தவமிருந்தார். திருமகளைப் பிரிந்ததினால் மிகவும் கவலையுற்ற திருமால், வாசுதேவ - சங்கர்ஷண - பிரத்யும்ன - அநிருத்த - புருஷோத்தம எனும் வியூக மூர்த்திகள் சகிதம் பிராமண வடிவம் கொண்டு பூலோகம் வந்து திருமகளைத் தேடலானார். கருடனும் ஒரு புறம் பறந்து திருமகளைத் தேடலானார். மேதாவி மகரிஷி இல்லத்தில் வஞ்சுளவல்லியாக வளர்ந்து கொண்டிருப்பவள் திருமகளே என கருடன் மூலமாக அறிந்து கொண்ட திருமால், அந்தணர் வடிவில் வஞ்சுளாரண்யம் வந்து வஞ்சுளவல்லியின் கையைப் பற்றினார். இதைக் கண்ணுற்று சபிக்க முற்பட்ட மகரிஷிக்கு, தனது சுயரூபத்தைக் காட்டினார் திருமால். வஞ்சுளவல்லி எனப்படும் நாச்சியாரை, திருமாலுக்கு மணம் முடித்துத் தர, மகரிஷி விதித்த நிபந்தனைகள் - திருமாலுடன் வந்த ஐந்து வடிவங்களுடன் பஞ்ச மூர்த்திகளாக இத்தலத்திலேயே எழுந்தருளி, திருமணக் கோலத்தில் சேவை சாதிக்க வேண்டும். இரண்டாவதாக இவ்வூரின் பெயர் நாச்சியாரின் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும். மூன்றாவதாக இங்கே நாச்சியாருக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு வஞ்சுளவல்லியை மணக்கின்றார் திருமால். இங்கு நாச்சியாருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலஸ்தானத்தில் பெருமாளை விட 3 அங்குலம் முன்னால் தாயார் இருப்பது, முன்னுரிமை அளிப்பதை குறிப்பதாக உள்ளது எனக் கூறுவர். கருடன் வைரமுடியை எடுத்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தபோது ஒரு மணி சிதறி திருநறையூரில் விழுந்தது. சிதறி விழுந்த இடம் மணிமுக்தா நதியாக விளங்குகிறது. சிதறிய மணியை எடுத்து கிரீடத்தில் பொருத்தி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சமர்ப்பித்துவிட்டு தானும் அவர் பக்கத்திலேயே நின்று கொண்டார் கருடன் என ஸ்தல வரலாறு. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: நறையூர் நம்பி, உற்சவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள், சிறப்பு மூர்த்தம்: கல் கருடன், தாயார்: வஞ்சுளவல்லி. திருநறையூர் மணிமாடக் கோவில் என்றும், கல் கருடன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக் கோவில்களுள் ஒன்று. மூலஸ்தானத்தில் மூலவராக நறையூர் நம்பி எனப்படும் ஸ்ரீ வாசுதேவன் கிழக்கே திருமுகமண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பரிபூரணன், நம்பி ஆகிய திருநாமங்களும் உண்டு. ஸ்ரீ சங்கர்ஷணன், ஸ்ரீ அநிருத்தன், ஸ்ரீ பிரத்யும்னன், ஸ்ரீ புருஷோத்தமன், பிரம்ம தேவர் ஆகியோரின் திருவுருவங்களை மூலஸ்தானத்திலேயே சேவிக்கலாம். மூலவருக்கு வலப்புறமாக உள்ள வஞ்சுளவல்லித் தாயாரின் மூல விக்ரகத்தை சேவிக்கலாம். (தாயாருக்கு தனிக் கோவில் இல்லை) மூலவருக்கு முன்பாக உற்சவர் ஸ்ரீநிவாசர் மாப்பிள்ளைக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். எழிலான திருமேனி. மணப்பெண் கோலத்தில் உற்சவத் தாயார் வஞ்சுளவல்லி பொற்கிளியுடன் ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சக்கரத்தாழ்வார் - யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், வேணுகோபாலன், வரதராஜன், ரங்கநாதர், ஸ்ரீராமர், சௌரிராஜன் ஆகியோர் தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். பெரிய திருவடியான கருட பகவான் தனிக் கோவில் கொண்டுள்ளார். நீண்டு வளர்ந்த கரங்கள், பெருந்தோள்கள், பிரம்மாண்டமான அழகிய திருமேனி கொண்டும், மண்டியிட்டு இரண்டு கைகளை உயர்த்தி, திருமாலை ஏற்றிச் செல்லும் கோலம் கொண்டும் சாட்சி தருகின்றார். சாளக்ராம சிலையாக உருவான கல் கருடன். மற்ற கோவில்களில் கருடன் அஷ்டநாகங்களை அணிந்திருப்பார். இங்கு இவருடைய வாளை அலங்கரிக்கும் நாகத்தையும் சேர்த்து ஒன்பது நாகங்கள் உள்ளன. குளிகன் மற்றும் திருவளந்தாழ்வான் ஆகிய நாகங்களை இரண்டு திருக்கரங்களிலும், வாசுகியை பூணூலாகவும், தக்ஷன் எனும் நாகத்தை அரை ஞாண் கயிறாகவும், கார்க்கோடகனை மாலையாகவும், பத்மன் மற்றும் மஹா பத்மன் ஆகிய நாகங்களை காதுகளிலும், சேஷனை தலையிலும், சங்கபாலனை வாளிலும் அணிந்து காணப்படுகிறார். வருடத்திற்கு இரண்டு முறை உற்சவம் காண, சந்நிதியிலிருந்து வெளியே எடுக்கின்றனர். மண்டபத்திற்கு வெளியே எடுக்கும்போது 4, 8, 16, 32, 64, 128 என்ற கணக்கில் சுமப்பவர்கள் (ஸ்ரீபாத தாங்கிகள்) இருப்பார்கள். உற்சவம் முடிந்து திரும்ப வைக்கும்போது 128, 64, 32, 16, 8, 4 என சுமப்பவர்கள் மாறும் அதிசயம் நிகழும் ஸ்தலம். விநாயகரைப் போலவே மோதகப்பிரியர் - அமுதகலசம் எனப்படும் கொழுக்கட்டையை நைவேத்தியம் செய்கின்றனர். பங்குனி - மார்கழி திருவிழாக் காலங்களில் கல் கருடன் புறப்பாடு புகழ் பெற்றது. ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பக்ஷாய தீமஹி தன்னோ கருட ப்ரசோதயாத்
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.