அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோவில் (மருதாந்த நல்லூர்)
God Name : மூலவர்: சற்குணலிங்கேஸ்வரர் எனப்படும் கருக்குடி நாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
சீதாப்பிராட்டி உருவாக்கிய மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபட்டுள்ளார் ஸ்ரீ ராமர். ஹனுமன் கொண்டு வந்த லிங்கம் தனி சந்நிதியில் உள்ளது. பிரம்மதேவரும் இந்த லிங்கத்தை பூஜித்து வழிபட்டுள்ளார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
நாம சங்கீர்த்தன பக்தியை வகுத்து தந்து, மக்கள் மத்தியில் ஏனாதி நாயனார் அவதரித்த ஸ்தலம் இது. ஒரு செட்டியின் தோஷத்தை நீக்கியருளிய ஸ்தலம். பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் நீக்க வல்ல ஸ்தலம்.
மூலவர்: சற்குணலிங்கேஸ்வரர் எனப்படும் கருக்குடி நாதர்.
அம்பாள்: சர்வாலங்கிருத மின்னம்மை எனப்படும் அத்வைத நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான சற்குணலிங்கேஸ்வரர். சற்குணன் எனும் மன்னன் பூஜித்ததால் இந்த பெயரைக் கொண்டார். இவருக்கு கருக்குடி நாதர் என்ற பெயரும் உண்டு. சீதா பிராட்டி தனது திருக்கரங்களால் மணலைக் கொண்டு உருவாக்கியதால் பிருத்வி லிங்கமாக போற்றப்படுகிறார்.
ஸ்ரீ ராமர் வழிபட்ட ஸ்ரீ சற்குணலிங்கேஸ்வரர், ஹனுமன் வழிபட்ட ஸ்ரீ ஹனுமந்தலிங்கேஸ்வரர் மற்றும் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
அம்பாள் சர்வாலங்கிருத மின்னம்மை எனப்படும் கல்யாண நாயகி அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அத்வைத நாயகி என்ற திருநாமமும் உண்டு. சந்நிதியில் ஒரு செட்டியின் உருவம் இடம் பெற்றுள்ளது.
சுவாமி அம்பாள் இருவரும் கல்யாணக் கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.
ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகர் விசேஷமானவர். வீணா தட்சிணா மூர்த்தியின் திருவுருவமும் பால சனீஸ்வரரின் திருவுருவமும் அழகாக இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.