அருள்மிகு ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள் மடாலயம் (மருதாந்த நல்லூர்)

God Name : இல்லை

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

கோதாவரி தீரத்திலிருந்து தஞ்சையில் மான்யம் பெற்று குடியேறிய, தெலுங்கு மொழி பேசும் அந்தணரின் புதல்வன் வேங்கடராமன். தகப்பனைப் புரிந்து கொண்டு அவர் சொல்படி நடக்கும் பிள்ளையும், பிள்ளையின் அருமை தெரிந்த தகப்பனுமாக இருந்தனர். வேங்கடராமனின் தந்தை ராம காவியத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ராமனின் ஒவ்வொரு செய்கையினையும் மனதில் பதிய வைத்துக் கொண்டு சதா ராமஸ்மரணையுடன் இருந்தான் பிள்ளை. அவனது தாயாரும் அடிக்கடி மகான்களின் கதைகளை கூறி வளர்த்து வந்தார். பெற்றோர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ஜானகி என்ற பெண்ணை மணந்தான் வேங்கடராமன். ராமர் சென்ற இடங்களுக்கெல்லாம் க்ஷேத்ராடமாகச் சென்று, மனதை ஒரு நிலைப்படுத்தி சத்குரு ஆனார். கணவனும் மனைவியுமாக ஊர் ஊராகச் சென்று நாம சங்கீர்த்தனம் செய்தனர். மக்கள் திரளாகக் கூடியதால் இவரது நாம சங்கீர்த்தனமும் ராம நாம ஜெபமும் பல ஊர்களுக்குப் பரவியது. போதேந்திர ஸ்வாமிகள் ஜீவசமாதியடைந்ததை கேள்விப்பட்டு வேதனையுற்று, மருதாந்தநல்லூருக்குத் திரும்பி வந்தனர். ஸ்வாமிகளின் ஜீவசமாதியைத் தேடினர். வெள்ளப் பெருக்கில் அடையாளம் காணப்படவில்லை. பின்னர் வெள்ளம் வடிந்ததும் வெறும் ஆற்று மணலில் அங்கபிரதட்சிணம் செய்து பல இடங்களில் காதை வைத்துக் கேட்டு ராம நாம ஒலி வந்த இடத்தைக் கண்டுபிடித்தார். தஞ்சை அரசனிடம் உதவி கேட்டு ஆற்றைத் திசை திருப்பி, அதிஷ்டானம் இருந்த இடத்தை மேடாக்கி, போதேந்திரருக்கு மடம் எழுப்புவதில் பெரு முயற்சிகள் செய்து வெற்றி கண்டார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.