அருள்மிகு அமிர்தகலேஸ்வரர் திருக்கோவில் (சாக்கோட்டை)
God Name : அமிர்தகலேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
மஹாபிரளய காலத்தில் உடலிழந்த உயிர்கள் அனைத்தையும் குடத்திலிட்டு, அதை தமது ஸ்வரூபமான அமிர்தத்தால் நிறைத்து வைத்தார் சிவபெருமான். மீண்டும் படைப்பு காலம் வரும் சமயம், அந்தக் குடம் ஊழிக்கால வெள்ளத்தில் மிதந்து, மூன்றாக உடைந்தது. முகபாகம் குடவாசல் என்றும், நடுப்பாகம் இவ்வூரான கலயநல்லூர் என்றும், அடிப்பாகம் கும்பகோணம் என்றும் மூன்று ஊர்களில் தங்கியது. அமிர்த கலசத்தின் நடுப்பாகம் தங்கிய இடம் என்பதால் கலயநல்லூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் எழுந்தருளியுள்ள ஸ்வாமி அமிர்தகலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்கு சாக்கியர்கள் கோட்டை கட்டி வாழ்ந்ததால் சாக்கோட்டை எனப்படுகிறது. சாக்கிய நாயனார் வழிபட்ட ஸ்தலம் என்பதால் சாக்கோட்டை எனப் பெயர் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அரி (ஹரி) சொல்லி வந்தபடியால் அரிசொல்நதி எனப் பெயர் கொண்டு, தற்போது அரிசில் ஆறு எனப்படுகிறது.
மூலவர்: அமிர்தகலேஸ்வரர், அம்பாள்: அமிர்தவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான அமிர்தகலேஸ்வரர். அமிர்தவல்லி அன்னை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். இவ்வாலயத்தில் காணப்படும் தட்சிணாமூர்த்தி - ருத்ராட்சம், அக்னி, சின் முத்திரை, சுவடி ஆகியன கொண்டு வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார். லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், தபஸ்வியம்மன் ஆகிய திருவுருவங்கள் போற்றத்தக்க எழிலுடன் விளங்குகின்றன. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சப்த மாதர்கள் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.