அருள்மிகு நடனபுரீச்வரர் திருக்கோவில் (தண்டந்தோட்டம்)
God Name : நடனபுரீச்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
நர்த்தனம் ஆடி வந்த சிவபெருமானின் காலிலிருந்த மணி கழன்று விழுந்தது. அதை கண்டெடுத்து தந்தையின் காலில் கட்டிய மணிகட்டிப் பிள்ளையார் இங்கு காட்சி தருகிறார்.
அனைத்து இயக்கங்களும் தன் தலை மீது நடைபெறுவதாக முப்பத்து மூன்று கோடி தேவர்களுக்கும் தாண்டவம் ஆடி காட்டிய இடம் இது. விரிந்த சடையினராக இல்லாமல், ஒற்றை சடையுடன் ஒரு புறம் சாய்ந்து காணப்படுகிறார்.
1972ஆம் ஆண்டு இந்த நடராஜர் உற்சவ விக்ரஹம் களவாடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
இத்தலத்தைப் பற்றிய தகவல்கள் பல செப்பேடுகளில் காணப்படுவதாகக் கூறுகின்றனர்.
சிவனார் திருநடனம் புரிந்தபோது, அவரது காலில் இருந்த சலங்கை மணிகள் தெறித்து விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று. திருத்தாண்டவத் தோட்டம் என்பது மருவி தண்டந்தோட்டம் என்றானதாகக் கூறப்படுகிறது.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: நடனபுரீச்வரர்் அம்பாள்: சிவகாமசுந்தரி.
மூலஸ்தானத்தில் நடனபுரீச்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். உயரமான திருமேனி. கிழக்கு பார்த்த சந்நிதி. வெளி மண்டபத்தில் தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் சிவகாமசுந்தரி எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
மேற்கு பிரகாரத்தில் பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், வீரபத்ரர், தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். 12 ராசிகளின் மேல் பீடமிட்டு அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தி மிகுந்த வரப்ரசாதி.
அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய ஸ்தலம் இது. திருமணக் கோலத்தில் காட்சி தரும் ரிஷபாரூடரின் ஐம்பொன் சிலை பேரெழில் கொண்டது.
மாப்பிள்ளைஸ்வாமி எனப்படும் காத்யாயினி உடனுறை கல்யாணசுந்தரர் விக்ரஹத்தை பாதுகாப்புக் கருதி ஒப்பிலியப்பன் கோவிலில் வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.