அருள்மிகு மஹா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில் (அய்யாவாடி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவள் ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா தேவி. நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தின் உக்ரத்தைத் தணிக்க அவதரித்தவள். ஒரு சக்தி அத்துமீறி உக்ரமடைந்து அழிக்கும் சக்தியாக மாறும்போது, அதைவிட தீவிரமான மஹாசக்தி தோன்றி, அந்த உக்ரத்தைச் சமநிலைப்படுத்த வேண்டும். அப்படி தோன்றியவளே பிரத்யங்கிரா. ஆங்கிரஸ், பிரத்யங்கிரஸ் எனும் இரண்டு முனிவர்கள் உக்ர தவமிருந்து அன்னையின் சக்தியை பூலோகத்திற்குக் கொண்டு வந்தனர். இவர்கள் இருவரின் பெயர்களைக் கொண்டே பிரத்யங்கிரா என்று அழைக்கின்றனர். ராம - ராவண யுத்தத்தின்போது, போரில் தான் யுத்தம் புரியவிருக்கும் ராம - லக்ஷ்மணர்களை ஜெயிப்பதற்காக பிரத்யங்கிரா தேவியை உபாசித்து நிகும்பலா யாகம் செய்து ஆராதித்தான். யாகத்தின் முடிவில் பிரத்யட்சமான தேவி, அதர்மத்திற்கு உதவ மாட்டேன் எனக் கூறி மறைந்து விட்டாள். எட்டு திசைகளிலும் மயானம் சூழ்ந்த இடமே யாகம் செய்ய தகுந்த இடம் என சுக்ரச்சார்யார் கூறியதால் இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தான் என ஸ்தல புராணம் கூறுகிறது. பிரத்யங்கிரா தேவிக்கு பிரியமான - பானகம், எள்ளு உருண்டை, உளுந்து வடை, மாதுளை மற்றும் பேரிச்சை ஆகியவற்றை நைவேத்தியங்களாகச் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக அதர்வண பத்ரகாளியான ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி எழுந்தருளியுள்ளார். சிம்ம முகம், மனித உடல், 18 திருக்கரங்கள் கொண்டும், குகை போன்ற வாயும், எண்ணற்ற தெற்றிப் பற்களும் கொண்டும், நான்கு சிம்மம் பூட்டிய ரதத்தில் அமர்ந்து தரிசனம் தருகின்றாள். வடக்கு பார்த்த சந்நிதி. லட்சுமி - சரஸ்வதி தேவியர்கள் உடன் உள்ளனர். உக்ர பிரத்யங்கிராவாக வந்தவள், ரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த ஸ்வரூபியாக இங்கு அமர்ந்துள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.