அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோவில் (அம்மன்குடி)
God Name : ஸ்ரீ கைலாசநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
அசுரஹத்தி தோஷம் நீங்க, ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தாள் பார்வதி. தவத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்க ஒரு விநாயகரையும் பிரதிஷ்டை செய்தாள் பார்வதி அன்னை. மகிஷவதம் முடித்து ரத்தம் தோய்ந்த சூலத்தை அலம்பிய இடம் பாப விமோசன தீர்த்தம் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ளது.
துர்க்கையின் பாதங்களில் வைத்து மந்திரித்த எலுமிச்சம்பழம், அட்சதை, விபூதி பெற்றுக் கொண்டால் நற்பலன்கள் பெருகுகின்றன.
தேவி தவம் புரிந்த இடம் என்பதால் தபோவனம் எனப் பெயருற்றது. அம்மன் குடி கொண்டு அருளிய ஸ்தலம் என்பதால் அம்மன்குடி என்றானது.
ராஜராஜ சோழனின் மந்திரியான கிருஷ்ண ராம பிரம்மராயர் கட்டிய கோவில்.
தஞ்சை பெரிய கோவில் பணி தடையின்றி நடைபெறவும், ராஜராஜரின் நீண்ட ஆயுளுக்காகவும், அமண்குடி துர்க்கை கோவிலில் சண்டி ஹோமமும், காயத்ரி ஹோமமும் நடைபெற்றது. பிரம்மராயர் முன் நின்று நடத்தினார்.
மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: பார்வதி அம்மை.
முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் மூலவரான கைலாசநாதர். தெற்கு நோக்கி தரிசனம் தருகின்றாள் அம்பிகை பார்வதி அம்மை. ஸ்தல விநாயகராக விக்னஹர கணபதி எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். சாளக்கிராம விநாயகர் என்பார்கள்.
தென்புறமாக உள்ள பிரதான சந்நிதியில் துர்க்கா பரமேஸ்வரி மகிஷாசுரமர்த்தினியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். சாளக்கிராம கல்லினால் வடிக்கப்பட்ட அழகிய திருவுருவம். சங்கு, பாணம், கேடயம், சக்கரம், வில், கத்தி, சூலம், மகிஷனின் தலை ஆகியன கொண்டுள்ள அஷ்ட புஜங்களுடன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள்.
இங்குள்ள யோக சரஸ்வதி வீணையில்லாமல் யோக நிலையில் இருக்கின்றார்.
மகிஷனை சம்ஹாரம் செய்ய வந்த துர்கா பரமேஸ்வரி - பிரம்மனிடமிருந்து ரத்த நிறமும், விஷ்ணுவிடமிருந்து வெண்மை நிறமும், சிவபெருமானிடமிருந்து தேஜஸ்ஸையும் பெற்று, இம்மூன்றும் சேர்ந்த ஒளிப்பிழம்பாக காட்சி தருகிறாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.