அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோவில் (கும்பகோணம்)

God Name : கும்பேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

ஸ்ருஷ்டி பீஜங்களையும், வேதங்களையும் பிரளய வெள்ளத்திலிருந்து காப்பாற்றி பாதுகாக்க உபாயம் கூறும்படி, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார் பிரம்மன். அமுதம் - மண் இவை இரண்டையும் சேர்த்துப் பிசைந்து குடம் ஒன்றை உருவாக்குமாறும், அதனுள் அமிர்தத்தை நிரப்பி, ஸ்ருஷ்டி பீஜங்களையும் வேதங்களையும் அதில் வைத்து, குடத்தின் வாயில் மாவிலை - வில்வம் - பூணூல் - தேங்காய் போன்றவைகளால் அலங்கரித்து மேரு மலைக்கருகே சேர்த்து விடுமாறு கூறினார் சிவபெருமான். பிரம்மனும் அவ்வாறே செய்தார். பிரளய வெள்ளம் உலகம் முழுவதையும் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டு எங்கும் பரவி ஓடி வருகையில் மேருமலையில் வைத்த அமுத கும்பம் தென் திசை நோக்கி மிதந்து வந்தது. அதனுள் வைக்கப்பட்டிருந்த மாவிலை முதலான பொருட்கள், பல் வேறு இடங்களில் சிதறி விழுந்தன. தென்திசை நோக்கி மிதந்து வந்த கும்பம் இங்கு தங்கிவிட்டது. கிராதமூர்த்தியாக வடிவெடுத்து (வேடன் வடிவில்) தோன்றிய சிவபெருமான் இந்த கும்பத்தின் மீது அம்பு எய்தார். கும்பத்தின் முகம் சிதைவுற்று நான்கு திசைகளிலும் அமிர்தம் சிதறி ஓடியது. அமிர்தத்தில் நனைந்த வெண்மணலை லிங்க வடிவமாக்கி அதனுள் ஒடுங்கினார் சிவபெருமான். இந்த லிங்க வடிவமே கும்பேஸ்வரர். அதே இடத்தில் கும்பேசர் கோவில் தோன்றியது என ஸ்தல வரலாறு. கும்பத்திலிருந்த அமிர்தம் சிதறிய இடங்கள் ஐந்து. இதை பஞ்ச குரோச ஸ்தலங்கள் என்பர். அவை 1.திருவிடைமருதூர், 2. திருநாகேஸ்வரம், 3.தாராசுரம், 4. ஸ்வாமிமலை, 5. திருப்பாடலவனம் என்பன. (ஒரு குரோசம் என்பது 10 மைல் தூரம்) கும்பேஸ்வரருடைய உற்சவ ஸ்தலங்கள் ஏழு. இதை சப்தஸ்தான ஸ்தலங்கள் என்பர். அவை -1.கும்பகோணம், 2. கலயநல்லூர், 3. திருவலஞ்சுழி, 4. தாராசுரம், 5. ஸ்வாமிமலை, 6. கொட்டையூர் 7. மேலைக்காவேரி. கும்பத்தின் வாயை அலங்கரித்த மாவிலை - வில்வம் - புஷ்பம் - தேங்காய் - பூணூல் - தர்ப்பை - உறி போன்ற பொருட்கள் சிதறி விழுந்த இடங்களிலெல்லாம் ஒவ்வொரு லிங்கங்களாக தோன்றின. இதைப் பற்றிய விபரங்களை அந்தந்த ஸ்தல வரலாற்றில் காணலாம். தேவாரத்திருத்தலம் - சக்தி பீடம்
மூலவர்: கும்பேஸ்வரர், அம்பாள்: மங்களாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மூலவரான கும்பேஸ்வரர். பாணத்தின் அடிப்பாகம் பருமனாகவும், மேல் பாகம் கூர்மையாகவும் அமைந்துள்ள அழகான திருமேனி. நாகாபரணத்துடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். கும்பத்திலிருந்து தோன்றியதால் கும்பேஸ்வரர் என்றும், அமுதத்திலிருந்து உண்டான இறைவனாதலால் அமுதேஸ்வரர் என்றும், ச்ருஷ்டி காலத்திலேயே தோன்றியதால் ஆதிகும்பேஸ்வரர் என்றும் பெயர்கள் கொண்டார். ஸ்வாமி கோஷ்டத்திலும், பிரகார வலச் சுற்றிலும் எண்ணற்ற மூர்த்தங்களை தரிசிக்கலாம். மூலவருக்குப் பின்னால் உள்ள சந்நிதியில் மயிலும் திருவாசியும் கொண்டு ஒரே கல்லினால் உருவாக்கப்பட்ட அழகிய ஆறுமுகனின் திருவுருவம் அற்புதமாக உள்ளது. முன்புறமாக ஐந்து முகமும், பின்புறமாக ஒரு திரு முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டு வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகின்றார். தனிக் கோவில் கொண்டுள்ள அம்பாள் மங்களாம்பிகை மிகுந்த வரபிரசாதி. கெண்டி, ஜெபமாலை ஆகியவற்றைக் கொண்ட மேற்கரங்களுடனும், அபய - ஊரு ஹஸ்தங்களைக் கொண்ட கீழ்க்கரங்களுடனுமான சதுர்புஜங்களுடன் கூடிய, நான்கடி உயரம் கொண்ட அழகான திருமேனி. வலது பாதத்தை சற்று முன்னே வைத்து தாமரை பீடத்தில் நின்ற திருக் கோலத்தில் தரிசனம் தருகின்றாள். வழிபடுவோர்க்கு மங்களம் அளிப்பதால் இறைவி மங்களாம்பிகை என்ற திருநாமம் கொண்டாள். சக்தி பீடங்களுள் ஒன்றான மந்திர பீடம் இங்கே இருக்கின்றது. 72 ஆயிரம் கோடி மந்திரங்கள் பீடத்தினடியில் உள்ளன. இதில் எழுந்தருளியவள் என்பதால் மந்திர பீடேஸ்வரி என்று போற்றப்படுபவர். அனைத்து மந்திர சக்திகளையும் ஒன்று சேர்த்த சிவபெருமான் அதையே பீடமாக்கினார். அம்பிகையை அதில் எழுந்தருளச் செய்தார் என ஸ்தல வரலாறு. காமகிரி பீடம், ஜாலாந்திர பீடம், ஒட்யாண பீடம், பூரணகிரி பீடம் ஆகிய நான்கும் ஒன்று சேர்ந்து மந்திரபீடம் ஆனது. வேட வடிவம் கொண்டு அமுத குடத்தின் மூக்கை சேதித்த கிராத மூர்த்தி அம்பாள் சந்நிதிக்கருகில் எழுந்தருளி உள்ளார். அம்பாள் கோஷ்டத்திலும் பிரகார வலச்சுற்றிலும் எண்ணற்ற மூர்த்தங்களை தரிசிக்கலாம். நவநீத விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. ஆறுகல விநாயகர், சபா விநாயகர், வலஞ்சுழி விநாயகர், வல்லப கணபதி, ஆதி விநாயகர், வன்னி விநாயகர் மற்றும் நவநீத விநாயகரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. அன்னபூரணி, மஹாலட்சுமி, கஜலட்சுமி, சரஸ்வதி, ஜேஷ்டா தேவி, துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். கொடிக்கம்ப மண்டபத் தூண்களிலும், அம்பாள் சந்நிதி மண்டபத் தூண்களிலும் பல அரிய சிற்பங்களைக் கண்டு மகிழலாம். நவராத்திரி மண்டப விதானத்தில் 27 நட்சத்திரங்களுடன் 12 ராசிகளையும் சேர்த்து ஒரே கல்லில் வடித்து உருவாக்கியுள்ளனர். கொடிக்கம்பம் அருகே லட்சுமிநாராயணப் பெருமாள் சந்நிதி உள்ளது. இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரருக்கு ஜ்வரம் வந்து அவதிப்படுபவர்கள் பிரார்த்தித்துக் கொள்கின்றனர். ஜ்வரம் நீங்கியதும், அரிசிக்கஞ்சி - சீரக ரசம் - பருப்புத் துவையல் நைவேத்யம் செய்கின்றனர். காலையில் சூரியனுக்கும் மாலையில் சந்திரனுக்கும் முதல் தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.