அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம் தாழக்கோவில்
God Name : பக்தவத்சலேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
திருக்கழுக்குன்றத்தில் பல மாதங்களாக தங்கி சிவ வழிபாடு செய்துகொண்டிருந்த மாணிக்கவாசகர், ஒரு நாள் கிரிவலம் செய்துகொண்டிருக்கையில், பொன்மயமான ஜோதிவடிவம் ஒன்று தோன்றியது. அதிலிருந்து பலவிதமான திருக்கோலங்களில் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தரிசனம் தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கருடன் செய்த சிவ நிந்தனையால் கோபமுற்ற நந்திதேவர், கருடனை தன் மூச்சுக்காற்றால் அலைக்கழித்து தண்டித்தார். கருடனை விட்டுவிடச் சொல்லி அடங்காமல் வாதம் செய்தார். பின் தான் செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாய் பூலோகம் வந்து, இம்மலையில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். நந்தியம்பெருமானது தவத்தை குலைக்க வந்த திலோத்தமையை பசுவாக உருவெடுக்கும்படி சபித்தார். இத்தலத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷியின் தவத்தை கலைத்த மாயீகன் எனும் அசுரனை, பன்றி வடிவம் கொள்ளுமாறு சபித்தார் மார்க்கண்டேயர். பின்னர் சுரகுரு என்னும் அரசன் வேட்டையாட வரும்போது, இந்த பன்றியின் மீது அம்பு எய்தான். அந்த அம்பு பசுவை தாக்கியது. இதனால் பசுவாக இருந்த திலோத்தமையின் சாபம் தீர்ந்தது. அரசனைப் பற்றிய கோஹத்தி காக வடிவம் கொண்ட பாறையாக மாறி காக மலை என்ற பெயரில் உள்ளது. கோவிலுக்குள் நந்தி தீர்த்தம் உள்ளது. சங்கு தீர்த்தக்குளம்: கோவிலின் கிழக்கே அரை மைல் தூரத்தில் தெருக்கோடியில் அமைந்துள்ளது. பெரிய குளமாகவும், அகலமான படிக்கட்டுக்களும், நடுவில் நீராழி மண்டபமும் கொண்டுள்ளது. சுற்றிலும் வீதிகளும், தோப்புகளும் அழகாக அமைந்துள்ளன. 12 ஆண்டுகட்கு ஒரு முறை சங்கு பிறக்கிறது என்பர். குளக்கரையில் சிறுசிறு ஆலயங்கள் உள்ளன. இத்தலத்தில் மார்க்கண்டேயன் தங்கி, தவம் செய்கையில் வழிபாட்டிற்குரிய தீர்த்த பாத்திரம் இல்லை என கவலை கொண்டான். மார்க்கண்டேயனுக்காக இக்குளத்தில் சங்கு தோன்றும்படி சிவபெருமான் செய்தார். இதனால் இக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு பிறக்கின்றது. பிறக்கும் சங்குகளை சங்கு மண்டபத்தில் சேமித்து வைத்துள்ளனர். இது ஒரு தேவாரத்திருத்தலம்.
மூலவர்: பக்தவத்சலேஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி. மூலஸ்தானத்தில், மூலவரான பக்தவத்சலேஸ்வரர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். சதுரபீட ஆவுடையாருடன் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். எழிலான திருமேனி. மூலஸ்தானம் கஜப்ருஷ்ட விமான அமைப்பைக் கொண்டுள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியும், அபய - வரத ஹஸ்தங்கள் கொண்டும், அபய ஹஸ்தத்தின் மீது கிரியை ஏந்தியும் தரிசனம் தருகின்றாள். மார்பில் ஸ்ரீ சக்ர பதக்கம் அணிந்துள்ளார். ஷோடஸ கௌரிகளுள் இந்த அம்பாள் திரைலோக்ய கௌரி எனப்படுகிறார். வண்டு வன விநாயகர் - கதலி வனத்தில் தோண்டியபோது கிடைத்தவர். கிடைக்கும்போது வண்டுகளால் சூழப்பட்டு இருந்தாராம். அதனால் வண்டு வனப் பிள்ளையார் என்ற பெயர் கொண்டார். அடுத்து ஆறுமுகப் பெருமானை தரிசிக்கலாம். வெளி மண்டபத்தில் ஏழடி உயர திருமேனியுடன் கம்பீரமாக காணப்படும் வீரபத்ரரை தரிசிக்கலாம். பெரிய திருவுருவாக நந்தியம் பெருமான், மலை மீதுள்ள வேதகிரீஸ்வரரை பார்த்தபடி உள்ளார். அஷ்டபுஜ துர்க்கையின் வடிவம் அழகாக இருக்கின்றது. இரண்டாம் பிரகாரத்தில் பார்வதீஸ்வரர் எனப்படும் பிரத்யட்ச வேதகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அக்னி மூலையில் கிழக்கு நோக்கி ஆன்மநாதர் சந்நதி உள்ளது. இதில் ஆன்மநாதர் மலர்பீட வடிவம் கொண்டுள்ளார். பாணம் இல்லை. மாணிக்கவாசகருக்கு குருவடிவமாய் தரிசனம் தந்ததாக ஐதீகம். வடக்கு பிரகாரத்தில் மாணிக்கவாசகர் சந்நிதி இருக்கின்றது. இரண்டாம் பிரகாரத்து பின்புறம் அர்த்தசந்திர வடிவுடைய அறை ஒன்று உள்ளது. இதை ஆபரணக் கொட்டடி என்று கூறுவார்கள். இது கஜ ப்ருஷ்ட விமான அமைப்பைக் கொண்டுள்ளது. ஆதியில் மூலஸ்தானமாக இருந்த இடம் என்பர். கிழக்கு சுற்றிலுள்ள 16 கால் மண்டபத்திலும், தெற்கு கோபுரம் அருகேயுள்ள ஆமை மண்டபத்திலும் காணப்படும் சிற்பங்களும், எழில் திருவுருவங்களும் பார்க்க பரவசமூட்டுபவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.