அருள்மிகு சக்ரபாணி திருக்கோவில் (கும்பகோணம்)
God Name : சக்கரபாணி ஸ்வாமி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
குடந்தை காவிரிக் கரையில், தன்னுடைய ஒளியை மிஞ்சும் அளவிற்கு பேரொளி வீசுவதைக் கண்ட சூரிய பகவான், போட்டியாக வந்துள்ளவர் யார் என அறிய முற்பட்டான். பேரொளிக்கு காரணமானவர் சுதர்ஸன சக்ரத்தாழ்வார் என தெரிந்து கொண்டான்.
இரண்டு ஒளிக்கிரணங்களின் உஷ்ணத்தால் உலகிலுள்ள உயிர்களும் பயிர்களும் நாசமாவதை கண்ட பிரம்ம தேவர், சீற்றம் தணியும்படி இருவரையும் வேண்டினார்.
தனது ஒளிக்கிரணங்களை சுருக்கிக் கொண்டார் சுதர்ஸனர். சூரியன் அவ்வாறு செய்ய மறுத்து விட்டார். சூரியனது அகங்காரத்தை அவனுக்கு உணர்த்த வேண்டி அவனது ஒளி அனைத்தையும் தன்னுள் ஒடுக்கி, சூரியனை கரிக்கட்டை ஆக்கிவிட்டார் சுதர்ஸனர். தனது பிழையை பொறுத்தருள வேண்டிய சூரியன், இங்கே தவமிருந்து சுதர்ஸனரை வழிபட்டு மீண்டும் தனது ஒளிக்கிரணங்களை பெற்றான் என ஸ்தல வரலாறு.
சுதர்ஸனருக்கு கட்டுமலை மீது கோவிலெடுத்து வழிபட்ட சூரியன், வைசாக பௌர்ணமியில் சக்கரபாணியை எழுந்தருளச் செய்து ஒன்பது நாட்கள் விழா கொண்டாடினார் என ஸ்தல வரலாறு.
ஜலந்திரன் எனும் அசுரனை அழிக்க சாரங்கபாணியிடமிருந்து வெளிப்பட்ட சக்ராயுதம் அசுர சம்ஹாரம் முடித்து, இங்கு தனிக் கோவில் கொண்டதாக கூறப்படுகிறது.
சக்கர தீர்த்தத்தில் மூழ்கினால் காசியை விட ஸ்ரேஷ்டம் என்பர்.
மூலவர்: சக்கரபாணி ஸ்வாமி் தாயார்கள்: சுதர்ஸனவல்லி, விஜயவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக சக்கரபாணி ஸ்வாமி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வட்டமான சக்கரத்தின் நடுவில் அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு காட்சி தருகின்றார். கோரைப்பற்கள் மற்றும் ஜ்வாலை வீசும் திருமுடி, முக்கண்கள் கொண்டு உக்ர மூர்த்தியாய் காணப்படுகின்றார். திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில்லம்பு, பாசம், கதை ஆகியன கொண்ட அஷ்டபுஜங்களுடன் கூடிய அழகான திருமேனி.
பக்கத்தில் சுதர்ஸனவல்லி, சூரியன், பிரம்மன், அக்னி ஆகியோர் காட்சி தருகின்றனர்.
சக்கரத்தாழ்வாரே மூலவராகவும், உற்சவராகவும் சேவை சாதிக்கின்றார். வன்னி மற்றும் வில்வத்தால் அர்ச்சிப்பது விசேஷம் என்பர். ருத்ராம்சம் கொண்டுள்ளதால் வில்வார்ச்சனை செய்வதாக கூறப்படுகிறது.
பிரகாரத்தில் விநாயகர், லட்சுமிநரசிம்மன், லட்சுமிநாராயணன், பஞ்சமுக ஹனுமன், விஜயவல்லித் தாயார் ஆகியோரை சேவிக்கலாம்.
சுதர்ஸனவல்லி - விஜயவல்லி உடனாய சக்கரத்தாழ்வார் தெற்கு வாசலில் சுதை வடிவில் தரிசனம் தருகின்றார்.
ஹனுமனின் செப்பு சிலையும் பெரிய ஆகிருதியுடன் சிலா வடிவில் காணப்படும் ஆஞ்சநேயரும் அழகாக இருக்கின்றனர்.
ஸ்ரீ ராமர் - சீதா தேவி - லட்சுமணன் ஆகியோரை தோளில் சுமந்து காணப்படும் வீர ஆஞ்சநேயரின் திருவுருவத்தை முன் மண்டபத்தில் சேவிக்கலாம்.
உத்ராயண வாசல், தட்சிணாயன வாசல் என இரண்டு வாசல்கள். கோவில் கட்டுமலை மீது அமைந்துள்ளது.
ஓம் ஸுதர்ஸனாய வித்மஹே ஹேதி ராஜாய தீ மஹி தன்னொ சக்ர ப்ரசோதயாத்.
சக்கரபாணிக் கோவில் வீதியின் தென்மேற்கு மூலையில் லட்சுமி வராஹப் பெருமாள் கோவிலொன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.