அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம் மலைக்கோவில்

God Name : வேதகிரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

வேதங்கள், தங்களின் குறைகளை கயிலாயநாதனிடம் முறையிட்டன. வியாச பகவான் எங்களை நான்கு பகுதிகளாகத் தொகுத்தார். அதன்பின் வருகை தந்த வேதவிற்பன்னர்கள் மேலும் விரிவுபடுத்தித் தொகுத்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வணங்குகின்றனர். எங்களுக்குள் ஒன்றுபட்டிருக்கும் நிலை இல்லை, பேதங்களில்லாமல் நாங்கள் இருக்க வழி செய்யுங்கள் என்று வேண்டின. வேதங்களை ஒரு மலை வடிவம் கொள்ளச் சொல்லி, அதன் மீது தாம் எழுந்தருளுவதாகக் கூறினார். ரிக்வேதம் மலையின் அடிப்பாகமாகவும், யஜூர் வேதம் மலையின் நடுப்பாகமாகவும், சாம வேதம் மலையின் மேல்பாகமாகவும், அதர்வண வேதம் மலையின் சிகரமாகவும் விளங்குகின்றன. இதனால் இம்மலை வேதகிரி என்றும், வேதங்கள் வழிபட்டதால் ஸ்வாமிக்கு வேதகிரீஸ்வரர் என்றும் பெயர்கள் வந்தன. யுகங்களுக்கு ஒன்று வீதம் கழுகுகள் வழிபட்டதால் கழுக்குன்றம் எனவும் பெயர் பெற்றது. கருடன் செய்த சிவ நிந்தனையால் கோபமுற்ற நந்திதேவர், கருடனை தன் மூச்சுக்காற்றால் அலைக்கழித்துத் தண்டித்தார். கருடனை விட்டுவிடச் சொல்லி அடங்காமல் வாதம் செய்தார். பின் தான் செய்த தவற்றுக்கு பிராயச்சித்தமாய் பூலோகம் வந்து, இம்மலையில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்தார். நந்தியம்பெருமானது தவத்தைக் குலைக்க வந்த திலோத்தமையை பசுவாக உருவெடுக்கும்படி சபித்தார். இத்தலத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த மார்க்கண்டேய மகரிஷியின் தவத்தைக் கலைத்த மாயீகன் எனும் அசுரனை, பன்றி வடிவம் கொள்ளுமாறு சபித்தார் மார்க்கண்டேயர். பின்னர் சுரகுரு என்னும் அரசன் வேட்டையாட வரும்போது, இந்தப் பன்றியின் மீது அம்பு எய்தான். அந்த அம்பு பசுவைத் தாக்கியது. இதனால் பசுவாக இருந்த திலோத்தமையின் சாபம் தீர்ந்தது. அரசனைப் பற்றிய கோஹத்தி காக வடிவம் கொண்ட பாறையாக மாறி காக மலை என்ற பெயரில் உள்ளது. பிரம்மபுத்திரர்கள் எண்மர், சாரூப பதவி வேண்டித் தவம் இருந்தனர். ஆனால் சாயுஜ்ய பதவி கேட்டு வாதம் புரிந்தனர். சிவநிந்தனை காரணமாக சாபம் கொண்டு கழுகுகளாக உருப்பெற்றனர். சக்தி பெரியதா, சிவம் பெரியதா என்ற வாதங்களில் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள சிவபெருமானை அணுகினர். சக்தியும் - சிவமும் ஒன்றுதான் என்று எடுத்துக்கூறியும், சச்சரவில் கழுகுகளாகப் பிறந்தனர் என்றும் கூறப்படுவதுண்டு. சிவநிந்தனை காரணமாக யுகத்திற்கு இரண்டு கழுகுகளாக இருந்து வழிபட்டு, சாப விமோசனம் பெறுகின்றனர். சாபத்தால் கழுகுகளாக உருவம் கொண்ட சண்டன், பிரசண்டன் இருவரும் கிரேதாயுகத்திலும், சம்பாதி, சடாயு இருவரும் திரேதாயுகத்திலும், சமபுகுத்தன், மாகுத்தன் ஆகிய இருவரும் துவாபரயுகத்திலும் வழிபட்டனர். சம்பு, ஆதி ஆகிய இருவரும் கலியுகத்தில் வழிபடுகின்றனர். மலை மேலுள்ள பாறை ஒன்றின் நடுவே சம்பாதிச்சுனை எனும் பட்சி தீர்த்தம் உள்ளது. பூசாரிப் பண்டாரம் வந்து, இங்குள்ள பெரிய பாறையின் மீது, ஆகாரத்தைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கின்றார். தினந்தோறும் உச்சிக்காலத்தில் (11 மணிக்கு) இரண்டு கழுகுகள் வந்து தங்களுக்குக் கொடுக்கப்படும் சர்க்கரை-நெய்-அன்னம் கலந்த உருண்டைகளைப் புசித்துவிட்டு மலையை வலமாகச் சுற்றிப் பறந்து செல்லும் பழக்கம் கொண்டுள்ளன. (சமீப காலமாக வருவதில்லை) சாபம் நீங்கப் பெற்றுவிட்டதாகக் கருதுகின்றனர். வேதமே மலையாக நின்றதால் அதன் மீது ஏறினால் தங்களது கால் பட்டுவிடுமே என, நால்வரும் மலை மீது ஏறாமல், கீழிருந்தே வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மலையின் கிரிவலப் பாதை 5 கி.மீ. தூரம் சுற்றளவு என்பர். கிரிவலப் பாதையில் சொக்கம்மன் கோவிலும், நால்வர் கோவிலும் உள்ளன. மலையிறங்கு பாதையிலுள்ள குன்றுக் கோவிலின் மையத்தில் சிவலிங்கமும், முன் மண்டபத்தில் பிரம்மனும், விஷ்ணுவும் செதுக்கப்பட்டுள்ளதால் இதை மும்மூர்த்தி ஸ்தலம் என்றும் கூறுவர். பாறைகளைக் குடைந்து உண்டாக்கிய குகைக்கோவில். வட இந்தியர்கள் இதை பட்சி தீர்த்தம் என்று கூறுவர். இங்கு செய்யும் நல்ல காரியங்களும், தானதர்மங்களும் பலமடங்கு பெருகிப் பலன் தருவதாகக் கூறுவர். தேவேந்திரன், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடிபூஜை செய்வதாக ஐதீகம். விழுந்த இடி, மேலைக் கோபுரத்தில் இறங்கி, சிவபெருமானை வலம் வந்து பூமியில் இறங்கிவிடும் எனக் கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்குச் சேதம் ஒன்றும் ஏற்படாது எனக் கூறுகின்றனர்.
மூலவர்: வேதகிரீஸ்வரர், அம்பாள்: பெண்ணின் நல்லாள் அம்மை. தட்சிண கைலாசம் என்றழைக்கப்படும் இந்த மலை 565 படிக்கட்டுகள் கொண்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து குன்றின் உயரம் 500 அடி இருக்கும். படியேறும் இடத்தில், அகஸ்தியர் பிரதிஷ்டை செய்த சித்தாத்ரி கணபதியின் கோவில் காணலாம். கீழே அய்யனாராகிய கணநாதர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். அரசரடி விநாயகரும் எழுந்தருளியுள்ளார். மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் மூலவரான வேதகிரீஸ்வரர். சுயம்பு மூர்த்தம். வாழைப்பூ வடிவம் கொண்ட அழகிய திருமேனி. கவசம் அணிவித்துள்ளனர். விஷ்ணு, பிரம்மன் ஆகியோரின் திருவுருவங்களை மூலஸ்தானத்தில் காணலாம். வேதங்களை மலைவடிவம் கொள்ளச் செய்து, அதன் உச்சியில் சிவபெருமான் இருப்பதாக ஐதீகம். இதனால் வேதகிரீஸ்வரர் எனும் திருநாமம். மலை மருந்தீசர், தேசிவிடங்கநாதர், நம்பிக் கொளித்த நாதன் ஆகிய பெயர்களும் இருக்கின்றன. அம்பாள் பெண்ணின் நல்லாள் அம்மை எனப்படும் சொக்க நாயகி மிகுந்த வரபிரசாதி. திரிபுரசுந்தரி என்ற திருநாமமும் உண்டு. உட்பிரகாரத்தில் சொக்கம்மன் சந்நிதி இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.