அருள்மிகு சக்திமுத்த உடையார் திருக்கோவில் (திருசக்திமுத்தம்)
God Name : சிவக்கொழுந்தீஸ்வரர். சிறப்பு மூர்த்தம்: தழுவக் குழைந்த நாதர்.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
ஒற்றைக்காலில் தவம் புரியும் அம்பிகையின் முன்பாக அக்னிஸ்வரூபமாக, ஜோதி வடிவமாக காட்சி தந்த இறைவன் என்பதால் சிவக்கொழுந்தீசர் என்ற திருநாமம் கொண்டார்.
கம்பை நதிக்கரையில் அம்பிகை தவம் செய்து கொண்டிருக்கையில், ஆற்று வெள்ளம் பெருகி ஓடி வந்தது. உடனே தான் பூஜிக்கும் லிங்கத்தை கட்டித் தழுவிக் கொண்டாள் அன்னை. அம்பிகையின் வளையின் தழும்பும், முலைத் தழும்பும் பெற்றார் இறைவன். அப்படி சக்தி தழுவி முத்தம் கொடுத்த ஸ்தலம் என்பதால் சக்திமுத்தம் என்றழைக்கின்றனர்.
திருவடிதீட்சை வேண்டிய அப்பர் பெருமானை இறைவன் நல்லூருக்கு வரும்படி பணித்த ஸ்தலம்.
செம்பியன் மாதேவி, குந்தவை பிராட்டி, மங்கையர்க்கரசி, சோழ மன்னர்கள் அனைவரும் இளமைப் பருவத்தைக் கழித்த நகரம் என்பர். செம்பியன் மாதேவி கட்டிய கோவில்.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: சிவக்கொழுந்தீஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சிவக்கொழுந்தீஸ்வரர். பெரிய பாணமுடன் காட்சி தரும் அழகிய திருமேனி. தீச்சுடர்களை லிங்கத் திருமேனியில் காணலாம். சக்திவனேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
கிழக்கு பார்த்த சந்நிதி. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் பெரியநாயகி எனப்படும் பிரஹந்நாயகி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
சுவாமி சந்நிதிக்கு இடப்புறமாக தழுவக் குழைந்த நாதர் தரிசனம் தருகின்றார். சக்தி தழுவிய உடையார் திருமேனி. ஒற்றைக்காலை தரையில் ஊன்றி, மற்ற காலை ஆவுடை மீது மடக்கி வைத்து, தனது இரு கரங்களாலும் லிங்கத் திருமேனியை தழுவி இருக்கும் திருக்கோலம்.
ஒற்றைக்காலில் தவம் செய்யும் அம்பிகை பின்புறத்தில் காணப்படுகின்றார்.
வல்லப கணபதியின் திருவுருவம் அழகாக உள்ளது. நடராஜப் பெருமானும் சரபேஸ்வரரும் இத்தலத்தின் விசேஷ மூர்த்திகளாக தரிசனம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.