அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (கொரநாட்டுக் கருப்பூர்)
God Name : சுந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
பாதிரி வனமாக இருந்த இத்தலத்தில் பிரம்மன் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டு ஞான உபதேசம் பெற்றார். அந்த லிங்கமே இங்கு மூலவராக சுந்தரேஸ்வரர் எனும் திருநாமத்துடன் தரிசனம் தருகிறார். இவ்விறைவனை குபேரன் வழிபட்டு தவமிருந்து செல்வத்திற்கு அதிபதியானார் என ஸ்தல புராணம் கூறுகிறது. பஞ்ச குரோச ஸ்தலங்களில் ஒன்று எனப் போற்றப்படுகிறது.
இந்திரன் ஐராவதத்துடன் வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டான் என புராணக் குறிப்பொன்று கூறுகிறது. தீர்த்தக்குளப் படித்துறையில் ஐராவதத்துடன் நிற்கும் இந்திரனின் விக்ரஹம் காணலாம்.
விக்ரமாதித்தன் காலத்து காளியை உஜ்ஜயனியிலிருந்து ஒரு பெட்டியில் வைத்து மிதக்க விட்டதாகவும் அந்த பெட்டி இங்கு கரை ஒதுங்கியதாகவும் கூறப்படுகிறது. அப்பெட்டியை திறக்க அனைவரும் பயப்பட்டனர். எட்டு வயது சிறுமி ஒருவள் அதை திறந்தாள். பெட்டிக்குள் காளியின் பாதி திருவுருவம் (இடுப்புக்கு மேல்) அஷ்டபுஜங்களுடன் காணப்பட்டது. ஊர் மக்கள் அந்த திருவுருவத்தை ஒரு குடிசையில் வைத்து பூஜித்தனர். உக்ரகாளியாக இருந்ததால் குடிசை அடிக்கடி தீ பற்றி எரிய ஆரம்பித்தது.
காஞ்சி மஹாப் பெரியவரிடம் சென்று நடந்ததைக் கூறி பரிகாரம் கேட்டார்கள். ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பூஜிக்குமாறு யோசனை கூறினார் மஹா பெரியவா. சுந்தர மகாகாளி என்ற பெயரையும் சூட்டினார்.
அன்று முதல் பெட்டிகாளியம்மன் இவ்வாலயத்தில் குடி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தேவார வைப்புத்தலம் - பஞ்ச குரோச ஸ்தலங்களில் ஒன்று.
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: அபிராமியம்மை.
சுந்தரேஸ்வரர் கோவில் என்பதை விட பெட்டி காளியம்மன் கோவில் என்றே பிரசித்தம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். உயரமான பாணமும் பெரிய ஆவுடையும் கொண்டுள்ள அழகிய திருமேனி. அருகே அபிராமியம்மை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார்.
கோஷ்ட மூர்த்தங்களும் பரிவார தேவதைகளும் அழகாக உள்ளன. அஷ்டநாக கன்னியர்கள் பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டுள்ளனர். சனி தோஷம் நீக்கும் காலபைரவர் விசேஷ மூர்த்தியாக தரிசனம் தருகின்றார்.
அம்பாள் சந்நிதியின் கிழக்கு பகுதியில் பெட்டி காளியம்மன் என போற்றப்படும் ஸ்ரீ சுந்தர மகாகாளி குடி கொண்டு தரிசனம் தருகிறாள். பெட்டிக்குள் இருக்கும் பிரம்மாண்டமான திருமேனி.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ராகு கால வேளையில் பெட்டி திறக்கப்படும். இந்த தினங்களிலும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் அஷ்டமி - நவமி தினங்களிலும் மகாகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்நாட்களில் பெட்டி காளியம்மனை வழிபடுவோர்களுக்கு எதிரிகளிடமிருந்து தொல்லைகள் இருக்காது என ஐதீகம்.
அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்த பிறகே பெட்டியை திறக்கின்றார்கள். குறிப்பிட்ட பூஜையும் தரிசனமும் முடிந்தவுடன் பெட்டியை மூடி விடுவார்கள். தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் நெய் தீபமேற்றி வழிபட்டு ஆறாவது வெள்ளியன்று நைவேத்யம் செய்து வழிபடும் பக்தர்கள் ஏராளம்.
சர்க்கரை பொங்கலும் தயிர் சாதமும் நைவேத்யம் செய்து விநியோகம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பள்ளயம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.